Pages

Tuesday, November 1, 2011

வாழ்தல்






குழந்தைகளை பள்ளிக்கனுப்பும்  
தாய்களின் முக மலர்ச்சியும்,     
பள்ளியிலிருந்து வீடு திரும்பும்  
சேய்களின் முக மலர்ச்சியும்   
ஒன்றைப் போலவே தெரிகின்றன.  
---------------------------------------------------- 
    
காவல் நிலையங்களும், 
நீதி மன்றங்களும் 
இல்லாத தேசத்தில்  
வாழ்ந்து மடிய ஆசை. 
------------------------------------- 





சூரியன் உதிக்காத வீட்டில் 
தங்கிப் பயிலும் 
அரும்பு மீசைகளுக்கு,  
தேவையெல்லாம்    
கொஞ்சம் உணவும், 
பை நிறைய கனவுமே.  
------------------------------------------ 

ஒட்டளித்தவனும்,   
ஓட்டு வாங்கியவனும்
தூங்குவதாக நடிப்பவர்கள். 
அவர்களை எழுப்ப முடியாது. 
வேண்டுமானால் அடிக்கலாம்.
 ----------------------------------------------- 


கடவுள் பெயரில் 
காணிக்கை வடிவில் 
கவுரவப் பிச்சைகள் 
அனுமதிக்கப் படுகின்றன. 
----------------------------------------  


ஐயப்பசாமி 
பக்தனின் வேண்டுகோளுக்கு 
செவிச் சாய்த்து  
தனி தம்ளரில் 
தண்ணியடிக்க 
அனுமதிக்கிறது.  
--------------------------------------------------- 





உண்ணாவிரதம்  
பலவேளைகளில் 
திகைக்கவைக்கும்.     


மூன்று மணிநேர 
உண்ணாவிரதம்  
வாழ்நாளெல்லாம்  
நடுங்க வைக்கும்.   
நகைக்க வைக்கும். 
------------------------------------   


பெற்றோரைப் பகைத்து 
காதலில் செயித்தவர்கள் 
பரீட்சையில் தேர்வாகி,  
கல்லூரியில் இடம் 
கிடைக்காதவரைப் போல 
மனம் வாடுகிறார்கள். 
----------------------------------------  
                  - அகரத்தான். 

5 comments:

  1. //காவல் நிலையங்களும்,
    நீதி மன்றங்களும்
    இல்லாத தேசத்தில்
    வாழ்ந்து மடிய ஆசை. //

    இதை படிக்கும் போது எனக்கு அந்த ஆசை வருகிறது நண்பா......

    ReplyDelete
  2. உங்க பிளாக் டிசைன் சூப்பரா இருக்கு....

    அந்த விளக்கு சூப்பர்.

    ReplyDelete
  3. கருத்துரைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  4. //காவல் நிலையங்களும்,
    நீதி மன்றங்களும்
    இல்லாத தேசத்தில்
    வாழ்ந்து மடிய ஆசை.
    //
    இது பேராசை

    ReplyDelete
  5. உங்களுக்கு மிகவும் பயனுள்ள இனையதளங்கள் பகுதி - 1 மிகவும் பயனுள்ளதாக இருந்தது ராஜா ....

    ReplyDelete