Pages

Saturday, August 18, 2012

தன்மான தலைவர் ....


திருப்புவனம் : திருப்புவனம் அருகே, விபத்தில் சிக்கி உயிருக்குப் போரடிக்கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ காப்பாற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

பரமக்குடியில் நடைபெற்ற விழா ஒன்றிருக்கு சென்றுவிட்டு மதுரை - ராமேஸ்வரம் மெயின்ரோட்டில், கார் மூலமாக வைகோ, திரும்பி வந்து கொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து தொண்டர்கள் கார்களில் சென்று கொண்டிருந்தா
ர். திருப்புவனம் அருகே, கழுகேர்கடை விலக்கு அருகே அவரது கார் வந்து கொண்டிருந்த போது அங்கே விபத்தில் சிக்கிய இரண்டு இளைஞர்கள் கால் முறிந்த நிலையில் துடித்துக் கொண்டிருந்தனர்.

இரு பக்கமும் சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வேடிக்கை பார்த்தனரே தவிரை யாரும் காப்பாற்றவோ, உதவி செய்யவோ முன்வரவில்லை. உடனே காரை நிறுத்திய வைகோ, காரை விட்டு இறங்கி, வலியால் துடித்துக் கொண்டிருந்த இருவரையும், மோதிய வேனிலேயே ஏற்றி, முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். கட்சியினர் இருவரையும் உடன் அனுப்பி, தகுந்த சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டார்.

விபத்தில் சிக்கிய இளைஞர்கள் திருப்பாச்சேத்தி ஆவரங்காட்டைச் சேர்ந்த மருதுபாண்டி,24, முனியாண்டிசாமி,24, என்பவராவர். மதுரைக்கு பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கியுள்ளனர். அந்த நேரத்தில் அங்கு வந்த வைகோ இளைஞர்களை காப்பாற்றி சிகிச்சைக்கு அனுப்பி வைத்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
 

10 comments:

  1. வைகோ அவர்களை பாராட்ட வேண்டும்...
    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மனித நேயமுள்ள மனிதர்! பாராட்டுக்கள்!

    இன்று என் தளத்தில்
    திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1
    http://thalirssb.blogspot.in/2012/08/1.html

    ReplyDelete
  3. மனித நேயமுள்ள மனிதர்
    https://www.youtube.com/edit?o=U&video_id=8X_1MgWVI8I

    ReplyDelete
  4. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
    https://www.youtube.com/edit?o=U&video_id=kCEcmA_JA9I

    ReplyDelete
  5. அருமை
    https://www.youtube.com/edit?o=U&video_id=TEwlc-Az-3s

    ReplyDelete
  6. அருமை https://www.youtube.com/edit?o=U&video_id=44JiJPaFwEM

    ReplyDelete
  7. https://www.youtube.com/edit?o=U&video_id=TiUW_1Q7blQ

    ReplyDelete
  8. super post
    https://www.youtube.com/edit?o=U&video_id=zoNZFkFeInc

    ReplyDelete
  9. super post
    https://www.youtube.com/edit?o=U&video_id=vId4R9BTi-k

    ReplyDelete