Saturday, December 3, 2011

ஒரு மலையாள படத்தில் இந்திய அமைதி (அழிப்பு ) படையை நியாயபடுத்தும் வசனங்கள்..

ஒரு மலையாள படத்தில் இந்திய அமைதி (அழிப்பு ) படையை நியாயபடுத்தும் வசனங்கள். தமிழ் படங்களில் நம் நியாயங்களை சொல்ல அனுமதிப்பார்களா இந்த இந்திய ஜனநாயக தேசத்திலே

ஒரு மலையாள படத்தில் வரும் இந்த காட்சியை பாருங்கள்.. எப்படி வஞ்சகதொடு உருவாக்கி இருக்கிறார்கள் என்று... அவர்கள் கருத்தை பொய்யும் புனைவும் கலந்து படத்தில் சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது நம் கருத்தை சொல்ல அனுமதி இருக்கிறதா?

Why Was Indian Peace Keeping Force (IPKF) sent to Sri Lanka by Rajiv Gandhi

In the military movie flick 'MISSION 90 DAYS', Megastar Mammootty explains to an LTTE cadet the exact truth behind the Rajiv Gandhi - LTTE issue which happened at Sri Lanka...

http://www.youtube.com/watch?v=evlxfcPvxfc&feature=share









கடவுள் ....






சில சமயங்களில் 
திருடர்கள் கடவுளாகவும் 
கடவுள்கள் திருடர்களாகவும் 
காட்சியளிக்கிறார்கள். 

தேர்தல் திருடர்கள் 
மக்களைக் காக்க 
கடவுள் அவதாரம் எடுக்கிறார்கள். 

கோவிலில் 
தஞ்சமடைந்த கடவுள்கள் 
மக்களிடம் திருடி  
பிச்சைப் பாத்திரம்  
ஏந்த வைக்கிறார்கள். 

கடவுளின் கருணை தான் 
உங்கள் பகல்களையும் இரவுகளையும் 
இனிமை நிறைந்ததாக்குகிறது. 

கடவுள்கள் வழங்கும் வாய்ப்புகளே 
உங்கள் உறவுகளுடன் 
நீங்கள் உறவாட 
கால அவகாசத்தை வழங்குகின்றன. 

தேர்தலில் யானை பலம் பெற்ற கடவுள்கள்  
அவர்களின் சமகாலத்தில் 
நீங்களும் வாழும் அரியதொரு வாய்ப்பை 
உங்களுக்கு வழங்குகிறார்கள். 

அவர்களின் இரக்க உணர்வு 
உங்களை நீண்ட நெடுங்காலம் 
வாழ வழி வகுக்கிறது. 

கடவுள்களை 
கேள்விகளால் வேள்வி செய்தால்  
தண்ணீரை விட இரத்தம் கெட்டியானது 
என்பதை உணரும் வாய்ப்பையும் 
வழங்கி மகிழ்கிறார்கள்.   

------------------------------------------------------------------- 


                                       - அகரத்தான்









Friday, December 2, 2011

கார்ப்பரேட் காந்திகள்.....






கார்பரேட் காந்திகளின் ஆட்சியில் 
தங்கள் பால்யங்களை 
கனவுகளில் தேடும் பெரியவர்கள்  
தங்கள் குழந்தைகளின் 
குழந்தைமையை சாகடித்து 
எந்திரத்தை வார்க்கிறார்கள். 

தொழில் வளம் பெருக 
கொல்லைப்புறம் நுழைந்த கடவுள் 
குடிகளின் குடுமியை 
கார்ப்பரேட்டுகளின் கையில் 
சிக்க வைக்கிறான். 

விளை நிலங்களை விற்ற விவசாயிகள் 
பன்னாட்டு முதலாளிகளின் அங்காடிகளில் 
விற்பனைப் பிரதிநிதிகளாக 
வேலை வாய்ப்புத் தேடுகிறார்கள். 
 
காந்தியவாதம் 
பிழைப்புவாதமானதொரு காலத்தில் தான் 
கசாப்புக்கடை காந்திகள்   
மரண தண்டனையை வலியுறுத்தி  
உண்ணாநிலை மேற்கொள்கிறார்கள். 

கண்ணுக்கு கண் 
பல்லுக்கு பல் என்றவர்கள் 
காந்தியம் பேசுகிறோம். 

இங்கு காந்திகள் தவறானவர்களா?  
காந்தியவாதம் தவறானதா?  





                          ---- அகரத்தான் 















Blogger Widgets