Monday, January 2, 2012

வானிலை,புயல் (cyclone) நிலவரங்களை சுயமாக கண்டுபிடிக்க.......







            'தானே' இந்த பெயரை கேட்டாலே புதுச்சேரியும் கடலூரும் ஆடிப்போயுள்ளது அந்த அளவுக்கு 'தானே' புயல் கோரதாண்டவம் ஆடியுள்ளது . கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அணைத்து தொலைகாட்சி சேனல்களிலும் வானிலை அதிகாரி ரமணன் அவர்களின் பேட்டியே பிரதானம் அந்த அளவுக்கு புயல் பீதி கடலோர மாவட்டங்களில் நிலவியது .. இனி புயல் , வானிலை நிலவரங்களை நம்மால் இணையத்தில் பார்த்து அறிந்துகொள்ள ஒரு இணையதள முகவரி உள்ளது
http://www.woeurope.eu/cgi-app/satellite?LANG=eu&STRUCTUR=_&CREG=igms&CONT=asie&BIG=1&LOOP=12&ZEIT=௨௦௧௨௦௧௦௨௧௪௦௦

மேற்கண்ட முகவரியில் உள்நுழைந்து loop என்கிற சொடுக்கியை அழுத்தி adjust speed என்பதில் slower or faster என்பதை தேர்ந்தெடுத்தால் வானம் மேக மூட்டமாக உள்ளதா புயல் இருந்தால் அதன் நிலவரம் போன்றவைகளின் அப்போதைய நிலவரத்தை அறிந்து கொள்ளலாம் .......






Friday, December 23, 2011

இந்த வார காமெடி பீஸ் .........




செய்தி - பொது விவாதத்திற்கு தயாரா சோனியாவிற்கு ஹசாரே சவால்

பாமரன் - தயார்தான் ஆனால் லோக்பால் , 2 ஜி பற்றியெல்லாம் பேசக்கூடாது சரியா
------------------





செய்தி - பிரதமருக்கு கருப்புகொடி விஜயகாந்த் அதிரடி

பாமரன் - காவேரி,மீனவர் பிரச்சனைகளில் வாய் திறக்காதவர் கருப்புகொடிக்காக முல்லை பெரியார் பிரச்சனை பற்றி பேசவா போகிறார் ,அப்படியே வெள்ளை சிவப்பு வண்ண கொடிகளையும் சேர்த்து காட்டினால் கூட்டணி பற்றியாவது வாய் திறக்கட்டும்
------------------

செய்தி - தமிழகத்திற்கு மத்திய அரசு அநீதி பிரதமருக்கு வைகோ கடிதம்

பாமரன் -  அது காலங்காலமாக நடக்கிறதுதானே புதுசா என்ன சொல்லவரீங்க அதை சொல்லுங்க
---------------





இந்த வார காமெடி பீஸ்
-----------------------------





கருணாநிதி -  முல்லை பெரியாறு அணை சம்மந்தமாக நடந்த மனித சங்கிலியில் கலந்து கொள்ளாததற்கு அவர் மத்திய அமைச்சர் என்பதுதான் காரணம் பார்லிமென்டில் வரும் கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டிய பொறுப்பு இருப்பதால் அதை தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அழகிரி வரவில்லை . என்று வெட்கப்படாமல் பேட்டி அளித்ததற்கு ..........

அய்யோ ... அய்யோ ....







Wednesday, December 14, 2011

கிராமம் நோக்கி ( Village)



இயந்திர வாழ்க்கையில்
இடிந்த நம் வாழ்வை
காண்போமா !!

ஓய்வு கிடைத்தால்
ஒதுங்கி போவோம்
நகரம் விட்டு
நகர்ந்து போவோம்
கிராமம் நோக்கி !!

கொட்டும்  மழைநீர்
புகாத தார் சாலை –
நிலமேன்றால் காரை

மண் கூட பூந்தொட்டியாய்
மரமெல்லாம் நம்
சிந்தனை போல்
போன்சாய்

இந்நகர வாழ்வை விட்டு
எப்போதேனும்....

உச்சி உருகும்
வெயில் போதும்
குடில் நுழைந்தால்
உயிர் குளிரும்
தரை குளிரும்

தாய் மெழுகிய
சாணத் தரை
போவோமா ஏதேனும் ஒரு நாளில்

மழையின்றி தவிப்போமே !
ஓர் நாளில்
ஒதுங்கி போவோம் கிராமம் நோக்கி !!

கிராம இலக்கணம்
அறிவாய் நீயும் !
குடும்ப வாழ்கை
குழைந்து போகா அன்பு வாழ்க்கை
ஊரார் முகம் ஒருவனறிவான்

கிராமம் கிழிந்து போகா
பழைய துணி

இன்றோ நாளையோ
மாறிப்போகும்
கான்கிரிட் வாழ்வு
கலந்து போகும்

“ நகரம் வெறுத்த  ஒரு நாளில்
நெய்த வேதனை நெசவு இது “


          - அகரத்தான் 
Blogger Widgets