செய்திகள்


டெல்லியில் சுப்பிரமணிய சாமி வீட்டில் தாக்குதல்!                    புதுடெல்லி : ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி வீடு டெல்லியில் நிஜாமுதீன் பகுதியில் உள்ளது. நேற்று மாலை அந்த வீட்டுக்குள் 15 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அதிரடியாக புகுந்து கற்களை வீசி தாக்கியது. அதில் 5 பேர், வீட்டின் சுவர் ஏறிக்குதித்து உள்ளே சென்று தோட்டத்தில் இருந்த மலர் தொட்டிகளை உடைத்தனர். மேலும் சுப்பிரமணிய சாமிக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தாக்குதல் நடந்தபோது, வீட்டில் சுப்பிரமணிய சாமி இல்லை. இதனையடுத்து இந்த தாக்குதல் நடத்திய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Blogger Widgets