
புகை
பிடிப்பதினால் ஏற்படும் தீமைகளைதான் இது வரை படித்து வந்திருப்பீர்கள் ஆனால்
இதனால் ஏற்படும் நன்மைகளை அறிந்திருபீர்களா என்பது தெரியவில்லை தொடர்ந்து
படியுங்கள்
புகை
பிடிப்பதினால் ஏற்படும் நன்மைகள்...
1) இலவச
சுற்றுலா :- அதாவது விதவிதமான கேன்சர் மருத்துவமனைகளுக்கு குடும்ப உறுப்பினர்களின்
செலவில் இலவச சுற்றுலா சென்று வரலாம் ..
( உலகளவில்
இறப்பிற்கு இரண்டாம் மிகப்பெரிய காரணமாக புகையிலை பயன்படுத்துவது அமைந்துள்ளது.
புகைபிடிப்போரில் பாதிக்கும் மேலானவர்கள் புகையிலை சம்பந்தப்பட்ட நோய்களினாலேயே
இறக்கின்றனர்.)
2) பிறர்க்கு உதவி :- அதாவது “தமக்கிருப்பதை பிறர்க்கு கொடுத்து உதவு” என்பதை போல தாம் பிடித்து வெளியே விடும் புகையினால்
அருகில் இருப்பவருக்கும் நோயை கொடுக்கலாம் .
( வாரத்துக்கு
நாற்பது மணி நேரம் சிகரெட் புகை உலவும் இடங்களில் இருப்பவர்கள், தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் அத்தகைய ஒரு சூழலில்
இருக்க நேர்ந்தால் அவர்களுக்கு நுரையீரல் புற்று நோய் உட்பட பல நோய்கள்
தாக்குகின்றன. )
3)
திருட்டை தடுத்தல் :- தொடர்ந்து புகை பிடிப்பதினால் ஏற்படும் தொடர் இருமலால் இரவு
திருடன் வருவதை தடுத்து சொத்தை காப்பாற்றலாம் .
( புகை பிடித்தல்
தனி மனிதனை மட்டுமன்றி சமூகத்தையும் பாதிக்கிறது என்பதும் நமக்குத் தெரிந்ததே.
சீனாவில் மட்டுமே இருபது இலட்சம் பேர் புகை பாதித்து மரணமடையும் வாய்ப்பு
இருக்கிறதாம் )
4) சிகரெட்
கம்பெனி முதலாளிகளையும் சில்லறை விற்பனையாளர்களையும் மேலும் மேலும்
பணக்காரர்களாக்க தொடர்ந்து சிகரெட் வாங்கி உதவலாம் .
( புகை
பழக்கத்துக்கு அடிமையான பலர் பிற்காலத்தில் அதிலிருந்து விடுபட புகையிலை மெல்லும்
பழக்கத்துக்குத் தாவி விடுகின்றனர். அது புகை பிடிப்பதை விட அதிக ஆபத்தான
விளைவுகளை ஏற்படுத்தும் என நியூயார்க் ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. )
5)ஆண்மை
குறைபாடு , வாய் துர்நாற்றம் போன்றவற்றை ஏற்படுத்தி கொண்டு மனைவி விரைவில்
விவாகரத்து கேட்க உதவலாம் .
( மூளையில் பரவும்
நிக்கோட்டின் புகை எல்லோருடைய மூளையிலும் ஒரே போன்ற மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை.
சிலருக்கு அது எந்த மாற்றத்தையும் செய்யாமல், சிலரிடம் அதிகப்படியான மாற்றத்தை நிகழ்த்தி
விடுகிறது )
மாசில்லா
காற்றை சுவாசிப்பது மனிதருக்கான பிறப்புரிமை, அது
புகைபிடிக்கும் சிறு பான்மையினரால் பறிக்கப்படுவது வருந்தத்தக்கது.
புகை பிடித்தலின் தீமைகளும், அதை விலக்கும், தவிர்க்கும் முறைகளும் அனைவருக்கும் தெரிந்திருந்தும் அது குறித்த விழிப்புணர்வை பல வேளைகளில் இளைய தலைமுறையினருக்கு நாம் ஏற்படுத்துவதில்லை
புகை பிடித்தலின் தீமைகளும், அதை விலக்கும், தவிர்க்கும் முறைகளும் அனைவருக்கும் தெரிந்திருந்தும் அது குறித்த விழிப்புணர்வை பல வேளைகளில் இளைய தலைமுறையினருக்கு நாம் ஏற்படுத்துவதில்லை
புகை பிடிப்பது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கெடுதல்.
இன்றே விலக்குவீர்,வாழ்வீர் பல்லாண்டு !!
இன்றே விலக்குவீர்,வாழ்வீர் பல்லாண்டு !!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மக்கா
மறக்காம பின்னூட்டம் இடுங்க..!!!!!
4 comments:
ஹா ஹா ஹா செம காமடி ........
ந
ன்
றி
maddiyosikarathu idana ,nailaruku thala
செம நறுக்!
அப்பரம் ஏன்டா வீக்குரிங்க நாயங்களா
Post a Comment