Saturday, January 21, 2012

படுகர் இன திருவிழாவும்... இன்றைய தமிழர் நிலையும் ....




       படுகாஸ்( Padukaas ) என்று அழைக்கப்படும் படுகர் இன திருவிழாவை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் நண்பர் சந்திரகுமார் அவர்கள் அழைப்பின் மூலம் கிடைத்தது.


       உதகை அருவங்காட்டுக்கு ( Aruvankadu ) அருகில் இருக்கும் ஜெகதளா ( Jagathala )  என்னும் படுகர் கிராமத்திற்கு நண்பரின் அழைப்பின் பேரில் சென்றோம் .


          அந்த ஊருக்குள் நுழைந்ததுமே திருவிழாக்கோலம் பூண்டிருந்த அந்த கிராமத்தை காணவே அழகாக இருந்தது ஆண்கள் எல்லாரும் வெள்ளை வேட்டி வெள்ளை சர்ட்டிலும் பெண்கள் வெள்ளை வேட்டியை உடம்பில் போர்த்திக்கொண்டும் இருந்தது அவர்களது வெள்ளந்தியான மனதை உணர்த்துவது போல் இருந்தது அவர்கள் உபசரிப்பும் அதுபோலவே .


         ஏழு கிராமங்கள் ஒன்று சேர்ந்து கெத்தையம்மன் என்னும் கடவுளுக்கு திருவிழா எடுத்து கொண்டாடினர் அனைவரும் ஒன்று சேர்ந்து நடத்திய திருவிழா அவர்களது ஒற்றுமையை உணர்த்தியது .

அனைத்தையும் விட முக்கியமான விசயம் அவர்களது மகிழ்ச்சி படுகாஸ் இன பாடல்களே . அவர்களது அனைத்து பாடல்களுமே நடனம் ஆட ஏதுவாக இருக்கும் ஆண்கள் பெண்கள் பாகுபாடு இல்லாமல் பறை அடிக்கும் பாட்டு கச்சேரியில் ஒலித்த பாடல்களுக்கும் நடனம் ஆடியது கண்கொள்ள கட்சியாக இருந்தது .சிறு வயது முதல் பெரிய வயது உள்ள அனைவருக்கும் நடனம் இயல்பாகவே வருகிறது. நடுங்க வைக்கும் குளிரிலும் இரவு 11 மணிவரை நிகழ்ச்சிகள் நடந்தாலும் கூட்டம் குறையாமல் ஒற்றுமையாக இருந்து திருவிழாவை நடத்தியது அவர்களது ஒற்றுமையை உணர்த்தியது. அவர்களது கிராமத்தில் வேறு இனத்தவர் எவரும் நிலம் வாங்கவோ குடியிருக்கவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது .

       
        இன்று தமிழன் தனது சொந்த அடையாளத்தை மறந்து மேற்கத்திய கலாசாரத்திற்கு மாறி வெகு நாட்களாகிவிட்டது. இன்று பெரும்பாலான குழந்தைகளுக்கு தமிழ் பெயரும் இல்லை தமிழ் சரியாக பேச வருவதும் இல்லை .நமது அடையாளத்தை நாம் தொலைத்து தொலைந்து கொண்டிருக்கையில் படுகர் இன மக்களின் கலாச்சாரம் மாறாத பண்டிகை கொண்டாட்டம் மற்றும் ஒற்றுமையை காண்கையில்  அவர்களை பற்றிய எண்ணம இன்னும் அதிகமானது .....




Blogger Widgets