Tuesday, November 22, 2011

'டேம் 999' படத்தை தடை செய்ய வலியுறுத்தல்.......



       

               
                                       முல்லைப் பெரியாறு அணையை உடைக்கும் சதிதிட்டத்தின் ஒருபகுதியாக, 'டேம் 999' என்ற ஆங்கிலத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள மதிமுக பொதுச் செயலர் வைகோ, இப்படத்தை வெளியிட மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படுமானால், அதனை எதிர்த்துத் தடுத்து நிறுத்த, மதிமுக அறப்போரில் ஈடுபடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

கேரளத்தின் சதிகார சக்திகள், ஒரு திரைப்படத்தைத் தயாரித்து வெளியிடுவதற்கு, இவ்வளவு காலமும் ரகசியமாக வைத்திருந்து, படத்தைத் தயாரித்து, வருகின்ற 25 ஆம் தேதி, இந்தியாவிலும், ஐக்கிய அரபு நாடுகளிலும் வெளியிட இருக்கின்றனர். படத்தின் பெயர், டேம் 999. 

இந்தத் தலைப்பே விஷமத்தனமானது. முல்லைப்பெரியாறு அணையில் 999 ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டுக்குச் சட்டப்படியான உரிமை இருப்பதைக் காட்டுவதற்காகத்தான், இந்தத் தலைப்பை வைத்து உள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சியில், 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணை, உடைந்து நொறுங்குவது போலவும், பிரளயமாய் வெள்ளம் பாய்வது போலவும், லட்சக்கணக்கான மக்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட, பரிதாபமாகப் பலியாகி மடிவது போலவும் படத்தின் உச்சகட்டக் காட்சியை அமைத்து உள்ளனர்.

, நவ.22: டேம் 999 திரைப்படம் தமிழக திரையரங்குகளில் திரையிடப்படுமானால் அதை தடுத்து நிறுத்த மதிமுக அறப்போரில் ஈடுபடும் என அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தென்தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே படுநாசம் செய்யக்கூடிய விதத்தில், ஐந்து மாவட்டங்களுக்குப் பாசனத்துக்கு நீரும், குடிநீரும் வழங்கி வருகின்ற, பென்னி குக் கட்டிய முல்லைப்பெரியாறு அணையை எப்படியும் உடைத்தே விடுவது என்று கேரள அரசு முடிவு எடுத்து விட்டது.

2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ல், இந்தப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி உச்சநீதிமன்றம் அளித்த தீர்பபைக் காலில் போட்டு மிதித்து விட்டு, அணையை உடைப்பதற்கும் அதிகாரம் உண்டு என்று கேரளம், சட்டமன்றத்தில் ஒரு சட்டத்தையே நிறைவேற்றியது. தற்போது, அணையை உடைப்பதற்கு, 40 கோடி ரூபாய்களை ஒதுக்கி விட்டது. எந்த நேரத்திலும், தென்பாண்டி மண்டலத்துக்கு அந்த அபாயம் நேரிடலாம்.

கேரளம் கட்டுவதற்குத் திட்டமிட்டு உள்ள புதிய அணையில் இருந்து, தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டுத் தண்ணீரும் தர வாய்ப்பு இல்லை. ஏனெனில், புதிய அணை, பள்ளத்தில் அமையும்.

கேரள அரசின் அக்கிரமப் போக்கை, மத்திய அரசு கண்டுகொள்ளாததுடன், ஊக்குவிக்கும் வகையில், கேரளத்தினர் தயாரித்துக் கொடுத்த ஒரு அணை மசோதாவை நிறைவேற்றுவதற்கும் திட்டமிட்டு விட்டது.

திரைப்படம் மூலம் விஷமத்தனம்..

கேரளத்தின் சதிகார சக்திகள், ஒரு திரைப்படத்தைத் தயாரித்து வெளியிடுவதற்கு, இவ்வளவு காலமும் ரகசியமாக வைத்திருந்து, படத்தைத் தயாரித்து, வருகின்ற 25 ஆம் தேதி, இந்தியாவிலும், ஐக்கிய அரபு நாடுகளிலும் வெளியிட இருக்கின்றனர். படத்தின் பெயர், டேம் 999. 

இந்தத் தலைப்பே விஷமத்தனமானது. முல்லைப்பெரியாறு அணையில் 999 ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டுக்குச் சட்டப்படியான உரிமை இருப்பதைக் காட்டுவதற்காகத்தான், இந்தத் தலைப்பை வைத்து உள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சியில், 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணை, உடைந்து நொறுங்குவது போலவும், பிரளயமாய் வெள்ளம் பாய்வது போலவும், லட்சக்கணக்கான மக்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட, பரிதாபமாகப் பலியாகி மடிவது போலவும் படத்தின் உச்சகட்டக் காட்சியை அமைத்து உள்ளனர்.

கடந்த 1975-ல், சீனாவில், பாங்கியாவோ எனும் அணை உடைந்ததைப் பின்னணி அமைத்து உள்ளனர். இந்திய, ஹாலிவுட் நடிகர்களைக் கொண்டு, மலையாளிகள் முதலீடு செய்து, இப்படத்தைத் தயாரித்து உள்ளனர்.

அச்சுதானந்தன் முதல்வராக இருந்தபோது, முல்லைப்பெரியாறு அணை உடைவது போலவும், இலட்சக்கணக்கான மக்கள் சாவது போலவும் கிராஃபிக்ஸ் காட்சிகளை வடிவமைத்து, ஐந்து இலட்சம் குறுந்தகடுகளை, கேரளம் முழுமையும் வழங்கினர். முதல்வரின் இணையதளத்திலேயே இந்தப் போலிக் காட்சிகளைக் காண்பித்தனர். அதைத்தான் இப்போது, பிரமாண்டமான திரைப்படக் காட்சியாக அமைத்து வெளியிடுகின்றனர்.

அரிசி, பால், காய்கறிகள், இறைச்சி உள்ளிட்ட அனைத்து உணவுப் பண்டங்களும் கேரளத்துக்கு அனுப்பி, அவர்களுக்கு எல்லாவிதத்திலும் உதவியாக இருந்து வருகின்ற நம் தமிழ்நாட்டின் தலையில் கல்லைப் போட, என்ன நெஞ்சழுத்தம் அவர்களுக்கு இருக்க வேண்டும்?

முல்லைப் பெரியாறு அணையை உடைக்க சதி..

முல்லைப் பெரியாறு அணை, எத்தகைய நில நடுக்கத்துக்கும் ஈடு கொடுக்கக்கூடிய வலிமையோடு உள்ளது என்பதைத் தமிழகத்துப் பொறியாளர்கள், ஆணித்தரமான ஆதாரங்களோடு குறுந்தட்டாக ஆக்கி உள்ளனர். ஆயினும், நமக்கு உரிமை உள்ள அணையை உடைக்க, நம் வாழ்வில் மண்ணைப் போட, கேரளம் முடிவு செய்து விட்டது.

நம்மைச் சீண்டிப் பார்க்கிறார்கள். நம் முகத்திலேயே மிதிக்கவும் துணிந்து விட்டார்கள். கேரள மக்களை நாம் எதிரிகளாகக் கருதியது இல்லை. ஆனால், இப்பிரச்னையில் தொடக்கத்தில் இருந்தே அங்கு உள்ள அரசியல் கட்சிகளும், சில அக்கறை உள்ள சக்திகளும், ஒன்றிரண்டு பத்திரிகை நிறுவனங்களும், எப்படியும் முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என முடிவு செய்து, அந்தச் சதித்திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கின்றார்கள்.

இந்தப் படத்தில், புராண காலத்துச் சம்பவங்களையும், மனிதர்களின் உணர்ச்சிப் போராட்டங்களையும் இணைத்து, நம் முல்லைப் பெரியாறு அணை உடைவதால் பெருந்துயர் விளைந்தது என்று சித்தரித்து உள்ளனர். இதனைப் புத்தகமாகவும் வெளியிட்டு உள்ளனர். தமிழ்நாட்டிலும் இந்தப் படம் திரையிடப்படும் என்று விளம்பரம் செய்து உள்ளனர்.

தமிழ்நாட்டுக்குப் பெருங்கேடு செய்யயும் கேரளத்தின் திட்டத்தை,  எக்காளத்தோடு வெளிப்படுத்தும் இத்திரைப்படத்தை, தமிழ்நாட்டில் திரையிட, தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.

இந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க, கடுகு அளவு அக்கறையேனும் இந்திய அரசுக்கு இருக்குமானால், இந்தியாவில் எங்கும் திரையிட, மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது.

'இந்தத் திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிட அனுமதிக்காதீர்கள்' என்று, தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் சங்கம், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் ஆகிய அமைப்புகளுக்கு, இருகரம் கூப்பி வேண்டுகோள் விடுக்கின்றேன். அவர்களுக்குக் கடிதமும் அனுப்பி உள்ளேன்.

அனைத்தையும் மீறி, தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படுமானால், அதனை எதிர்த்துத் தடுத்து நிறுத்த, மறுமலர்ச்சி தி.மு.க. அறப்போரில் ஈடுபடும் என எச்சரிக்கின்றேன்," என்று வைகோ கூறியுள்ளார்.

ராமதாஸ் கோரிக்கை...

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "கேரளத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பணியாற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் ஆகியவற்றின் நிதி உதவியுடன் 'டேம் 999' என்ற பெயரில் ஆங்கில திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் இந்தியாவில் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.

முல்லைப் பெரியாற்று அணை உடைந்து பேரழிவு ஏற்படுவது போன்ற காட்சிகள் நிறைந்த இப்படம் வெளியானால் தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களிலும் பொது அமைதி பாதிக்கப்படும்.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று பல்வேறு வல்லுநர் குழுக்கள் ஏற்கனவே அறிக்கை அளித்துள்ள நிலையில் எப்படியாவது அந்த அணையை உடைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் 'டேம் 999' திரைப்படத்தை கேரள அரசு நிதி உதவி செய்து தயாரித்திருக்கிறது.

எனவே, இந்தத் திரைப்படத்தை இந்தியாவில் வெளியிட தடை விதிக்க வேண்டும். இதற்காக மத்திய அரசை தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையாக வலியுறுத்த வேண்டும்," என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

http://news.vikatan.com/index.php?nid=5099













No comments:

Blogger Widgets