Saturday, November 19, 2011

கோபம் - 1 


         கடிதம் எழுதுகிறேன் , கண்டனம் தெரிவிக்கிறேன் ,வன்மையாக கண்டிக்கிறேன் ,வருத்தம் தெரிவிக்கிறேன்,கட்சத்தீவை மீட்க வேண்டும் ,மீன்பிடி உரிமையை வழங்கவேண்டும் போன்ற வீராவேச பேச்சுக்களை தவிர தமிழக ஆட்சியாளர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க வேறு ஒன்றும் புடுங்கமுடியவில்லை
   கனடாவில் ஒரு (ஆம் ஒரே ஆள்தான் )சீக்கியன் தாக்கபட்டதற்கு இந்திய பிரதமர் கொதித்து எழுகிறார் ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்பட்டால் ஒட்டு மொத்த இந்திய ஆட்சியாளர்களும் கண்டன அறிக்கை விடுகின்றனர் ஆனால் இங்கு ஆயிரக்கணக்கான தமிழர்கள் (இந்தியன் என்று சொன்னால்மட்டும் என்ன நடக்க போகிறது )கொல்லப்படுகின்றனர் ஆனால்  இன்று வரை இந்திய ஆட்சியளார்களிடமிர்ந்து ஒரு கண்டன அறிக்கை கூட வரவில்லை . என்ன தமிழன் உயிர் என்றால் வெறும் மயிர் என்ற நினைப்பகிவிட்டதோ என்னவோ
ஒரு மீனவன் அல்லது ஒரு நாட்டு பிரஜை கடல்  எல்லையை தாண்டி விட்டால் கைது செய்து விசாரித்து பின்னர் ஒப்படைக்க வேண்டுமே தவிர அவர்களின் உயிரை பறிக்கும் உரிமையை இவர்களுக்கு வழங்கியது யார் ?

     

       சிங்களந்தான் தாக்கி கொஞ்சம் கொஞ்சமாக கொல்கிறான் என்றால் தமிழினத்தை ஒரேடியாக முடிக்க கூடங்குளம் அணு உலை வேறு . அதை ஆதரித்து இங்கேயே குரல்களும் வருகிறதே என்ன சொல்ல !!
        கேரளவால் மறுக்கப்பட்ட அணு உலை ஆந்திரா,கர்நாடகாவால் மறுக்கப்பட்ட அணு உலை இன்று கூடங்குளத்தில் வந்து உட்கார்ந்துள்ளது . இதை யார் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றார்கள் அன்று இருந்த தமிழக ஆட்சியாளர்களின் அறியாமையா அல்லது கண்டும் காணாத போக்கா தெரியவில்லை .
           
      முல்லைபெரியாறு ,காவேரி ,கட்சத்தீவு இன்னும் எண்ணற்ற பிரச்சனைகளில் நடுவண் அரசால் வஞ்சிக்கப்படுகிறது ஆனால் இன்று வரை தமிழகத்தில் இதற்க்காக ஒரு பெரிய போராட்டம் நடந்ததாக தெரியவில்லை மானாட மயிலாட பார்பதற்கும் மூளையை மழுங்கடிக்கும் நாடகங்களை கானுவதற்குமே நேரம் போய் விடுகிறது இன்னும் சில ஆண்டுகளில் வேறு மாநிலத்தவனின் ஆதிக்கம் தான் தமிழ்நாட்டில் நடக்கப்போகிறது இப்பவே சில சர்வே முடிவுகள் சொல்கின்றன தமிழ் நாளிதழ்களுக்கு இணையாக மலையாள நாளிதழ்கள் விற்பனையாகின்றன என்று .
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு !!
ஆம் வந்தாரை வாழவைத்துவிட்டு மண்ணின் மைந்தர்கள் நாதியற்று நிற்கும் காலம் வெகு தொலைவில் இல்லை
கேட்காம கேட்காம இருந்து !!
நாம போனமடா சூடு சொரணை மறந்து !!
இப்ப போகுதடா கோவணமும் பறந்து ....!!

ஏதோஎன் ஆதங்கம் ..........!!!!

2 comments:

Online Works For All said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

agararaththaan said...

enna seiya thozha!
aneethi kandu
sinanthu ezhum thamizhargal iraiyaanmaiyin kodum karangalaal adakki odukki sithaikkappatta nilaiyil, Cinema thamizhargal ootti valarkkap padukira kodumai allavaa ingu kaana mudikirathu.

Blogger Widgets