
சாதியை விட்டு
சற்றேனும் விலகி வா !
கடவுள் மதம் விட்டு
கணமேனும் கடந்து வா !
மூடத்தை முற்றாய் விட்டு
முழுதாய் சிந்திக்க வா !
முனகலை விட்டு உன்
மூலத்தை தேடி வா !
பொன்னியின் மைந்தனாய்
பொங்கி வா தமிழா !!
புதைந்த நம் புறநானுற்றை
புவியோர்க்கு புலர்த்த வா !
காமத்தின் காதலை விட்டு
குறுந்தொகையில் குளித்து வா !
பழமையை பலிகொடுத்து
புதிதாய் பிறந்து வா ....!!
No comments:
Post a Comment