சாகாவரம் பெற்றோர்
கை தூக்குங்கள்!
அணு உலையை
இப்போதே மூடுகிறோம்.
உங்கள் மேல் ஆணை.
---------------------------------------
மதிப்பெண் வாங்கி
படிச்சது அந்தக் காலம்.
பணப் பை நெறஞ்சா
படிக்க முடியுது இந்தக் காலம்.
போலி பொறியாளன்,
போலி மருத்துவன்,
போலி அரசியல்வாதி..
இறுதியில்
போலி சனநாயகம்.
போக போக
எல்லாம் பழகிடும்.
அடங்கு.
டென்சன் ஆனா,
பென்சன் வாங்கமாட்ட.
-------------------------------------
இ.ஆ.ப.,
இ.கா.ப.,
பொறியியல்,
மருத்துவம்னு
ஒரு பக்கம் போட்டி போட்டு
படிச்சு மேல வர்றான்.
இன்னொரு பக்கம்
சோடா பாட்டில் அடிக்கிறான்.
கட்டபஞ்சாயத்து பண்றான்.
நில அபகரிப்பு செய்றான்.
கொலை செய்றான்.
கொள்ளை அடிக்குறான்.
கட்சியில சீட்டு வாங்குறான்.
செயிச்சு மந்திரியாகுறான்.
படிச்சவன் சலாம் வக்குறான்.
கார் கதவ தெறந்து உடுறான்.
விந்தையான சனநாயகம்!
விந்தையான சட்டம்!
விந்தையான மக்கள்!
----------------------------------------------
படத்தை பார்த்து வந்துருந்திங்கான மன்னிக்கவும்
என்ன செய்ய இப்படித்தானே அழைக்க வேண்டி இருக்கு ....
மக்கா அப்படியே ஓட்டு போட மறந்துறாதிங்க....
2 comments:
சமூகம் சார்ந்த பிரச்சனைகளில் நமது இயலாமையும் கோபமும் கொண்ட தங்கள் பார்வை பதிவுகள் மிக அருமை
தங்களின் கவிதைகளில் கோபங்களையும் இயலாமையும் தவிர்த்த மற்ற அழகியல் சார்ந்த உணர்வுகளின் பதிவுகளையும் எதிர்நோக்குகிறேன் .....வாழ்த்துக்களுடன் தம்பி
நன்றி நாடோடி அவர்களே முயற்ச்கிறேன் ......
Post a Comment