Wednesday, November 30, 2011

நூறு நாள் வேலைத் திட்டம்






யாரும் யாரையும் 
கண்டு கொள்ளக் கூடாதென 
கொள்ளையடிப்பவனுக்கும், 
கொள்ளை கொடுப்பவனுக்கும் 
எழுதப் படாததொர் ஒப்பந்தம். 
------------------------------------------------ 

                           - அகரத்தான். 





தேசப்பற்று







கல்வி 
வேலைவாய்ப்பு 
வாழும் உரிமை 
கருத்து சுதந்திரம் 
உறவுகள் அழிப்பு 
உடைமைகள்  அழிப்பு 
இனமழிப்பு 
மொழியழிப்பு 
அந்நிய ஆக்கிரமிப்பு 
பண்பாட்டு அடையாளமழிப்பு 
இறையாண்மைக்குட்பட்ட குடிமகனை 
நேசநாடு கொன்று வீசுதல் 
கார்பரேட்டுகள் கொள்ளை இலாபத்திற்கு  
பூர்வகுடிகளை பசுமை வேட்டையாடுதல் 
சில்லறை வணிகமழிக்க 
பன்னாட்டு பகாசுரர்கள் படையெடுப்பு 
அணு ஆயுதம் தயாரிக்க 
வலிமையற்றோன் வாழுமிடம் 
சிறப்பு பொருளாதார மண்டலம் 
என்று ஏது நிகழ்ந்தாலும் 
கண்டு கொள்ளாதே! 
கவலை கொள்ளாதே! 

கொடிநாளின் இனிப்பு சுவைத்து 
தேசப் பற்றாளனாய் வாழ்ந்து மடி! 

அணிலின் முதுகில் 
இராமர் மூன்று கோடு போடும்போது,  
தேசம் உனக்கு சிலை வைக்கும்! 
-------------------------------------------------------------------  

முழுப் பைத்தியங்களை சமாளிக்கலாம். 
அரைப் பைத்தியங்களை 
ஒன்றும் செய்ய இயலாது! 
ஆமோதிக்கிறாள் இல்லத்தரசி! 
---------------------------------------------------------------- 

வழித் தடத்தில் 
சுடி, சேலை கடக்கையில் 
முகம் பார்த்து புளகாங்கிக்கும் 
சில்லரைப் புத்தி 
கட்டை காடு சேரும்வரை 
நிழலாய் கூடவே வருமோ? 
------------------------------------------------ 

எல்லா உடலும் 
எக்கு உடல் தான் 
நோய்மை வந்து 
வருத்தாத வரை. 
------------------------------ 

எதற்கெல்லாமோ 
யாரையெல்லாமோ 
ஏமாற்றிக் களிக்கிற சைத்தானுக்கு 
நோய்மையிடம் 
ஏமாந்து போகிற சூட்சுமம் மட்டும் 
புரிபடவே இல்லை. 
----------------------------------------------------- 

Saturday, November 26, 2011

ஓ... மாவீரர்களே!





ஓ... மாவீரர்களே! 
-------------------------------------------------- 

முகமறியா தலைமுறை வாழ 
தன் முகம், முகவரி அழித்தவர்களே! 
மக்களை நேசித்ததின் பொருட்டு 
மண்ணுக்கு உரமானவர்களே! 
இனவாத வல்லூறுகளிடமிருந்து 
எம்மினத்தை அடைகாக்க 
கேடயமாய் நின்றவர்களே! 
அரச பயங்கரத்திற்கு எதிராய் சமராடி 
ஒரு தசாப்தத்திற்கு மேலாய் 
எம்மினம் சுவாசிக்க 
தம் சுவாசம் கொடுத்தவர்களே! 
விடுதலைக் கனவு சுமந்து 
சமரசமற்று சமர்க் களங்களில் 
சதுராடிய புறநானூற்றுப் புலிகளே! 
நீங்கள் பாடிய பரணியில் 
வங்கக் கடல் 
செங் கடலாயிற்று. 
தாயகக் கனவுக்கு 
தன்னையே அர்ப்பணித்தவர்களே! 
உம் ஈகத்திற்கு ஈடில்லை அவனியிலே! 
உம் ஈகம் வீணாக விடோம்! 
வெல்வோம் தமிழீழம்! - அதையே 
உரக்கச் சொல்வோம் நாளும்! 
புலிகளின் தாகம் 
தமிழீழத் தாயகம்! 
               -------------- 

                             - அகரத்தான். 









Friday, November 25, 2011

நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்


நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்
பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்!

முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம்.

பாலை’ என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியவன் நான். என் பெயர் ம.செந்தமிழன்.

பாலை’ படத்தில் அதன் நாயகி காயாம்பூ பேசும் வசனங்களில் எனக்கு நெருக்கமானது, ‘பிழைப்போமா அழிவோமா தெரியாது… வாழ்ந்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’ என்பது.

பாலை’ குழுவினர் உங்களிடம் கூற விரும்புவதும் ஏறத்தாழ இதுவே.

பாலை படம் தமிழினத்தில் பதிவாகுமா அழிந்து போகுமா தெரியாது… இப்படி ஒரு படம் எடுத்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்

சில நாட்களுக்கு முன் பாலையின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த இயக்குனர் பாலுமகேந்திரா, “பாலை உலகத் திரைப்பட வரலாற்றில் குறிக்கத்தக்க இந்தியப் படமாக இருக்கும். இது ஒரு தமிழ்ப் படம் என்பதில் எனக்குத் தனிப்பட்ட கர்வம் உண்டு. எனது 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எந்தப் படத்தைப் பார்த்தும் இந்தப் படத்தை நான் இயக்கவில்லையே’ என ஆதங்கப்பட்டதில்லை. பாலை படம் என்னை அப்படி ஏங்கச் செய்கிறது’” என்று கடிதம் எழுதிக் கொடுத்தார்.

சத்தியமாக இவ்வார்த்தைகளுக்கான தகுதி எனக்கில்லை. இவை ஒரு மூத்த படைப்பாளியின் உணர்ச்சிவய வார்த்தைகள்.

முன்னோட்டக் காட்சி பார்த்த கார்ட்டூனிஸ்ட் பாலா முதல் மென்பொருள் இளம் பொறியாளர் விர்ஜினியா ஜோசபின் வரை பாலையை மனமார வாழ்த்துகிறார்கள்.

இவர்கள் அனைவரின் வேண்டுகோளும் மக்களை நோக்கி இருக்கிறது. அவசியம் பாலை படத்தைப் பாருங்கள்’ என்கிறார்கள் இவர்கள்.

எனக்கும் என் குழுவினருக்குமான வேண்டுகோள் மக்களை நோக்கி இல்லை. அதற்கான சூழலும் எழவில்லை. எங்கள் வேண்டுகோள் திரையுலகை நோக்கி இருக்கிறது.

தமிழகத்தின் சரி பாதி பகுதிகளில் பாலையைத் திரையிட ஒரு திரை அரங்கு கூட கிடைக்கவில்லை. இதற்கான காரணங்கள் நிறைய. அவற்றை நான் அடுக்க விரும்பவும் இல்லைஇப்போது அதற்கான அவகாசமும் இல்லை.

ஓர் உண்மையை உரத்துச் சொல்ல விரும்புகிறேன்.

அதிகாரமும் பெரும் பணமும் இருந்தால் குப்பைகளுக்கும் திரையரங்குகள் திறக்கும். இல்லையென்றால்இயக்குனர்தயாரிப்பாளர் முகங்களில் குப்பை வீசப்படும்

இன்றைக்குத் தமிழகத்தில் உள்ள ஆயிரத்து இருநூறு திரையரங்குகளில் சரி பாதியை மிகச் சில படங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இவை ஓடும் திரையரங்குகளுக்குச் சென்று பாருங்கள். மக்கள் கூட்டம் அலைமோதுகிறதா அல்லது இவை வெறுமனே பணபலத்தாலும் அதிகார பலத்தாலும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளனவா என்பதை நீங்களே உணரலாம்.

ஒவ்வொரு அரங்கத்துக்கும் இலட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டுஅவ்வரங்குகளில் வேறு படங்கள் வராமல் பாதுகாக்கப்படுகின்றன.

திரைப்படங்களால் நிரம்ப வேண்டிய அவ்வரங்குகள் மிகச் சில முதலைகளின் கழிவுகளால் நாற்றமெடுத்துக் கிடக்கின்றன.

தமிழகத்தில் DAM-999 என்ற படத்துக்குக் கிடைத்த திரையரங்குகளில் 25% கூட பாலைக்குக் கிடைக்கவில்லை! முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை மலையாளிகளுக்குப் பிடுங்கித் தரும் படமாக இருந்தாலும் பரவாயில்லைதமிழரின் வரலாற்றைப் பதிவு செய்யும் படத்துக்கு அரங்கு இல்லை. அழுவதைத் தவிர வேறு என்ன வழி?

இப்போது DAM-999 படம் தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் அந்தத் திரை அரங்குகளில் மிகச் சில கூட பாலைக்குக் கிடைக்கவில்லை. அவ்வரங்கங்கள்வேறு ஒரு Warner Brothers தயாரிப்புப் படத்துக்காகக் காத்திருக்கின்றன. ஜாக்கிசானின் 1911 படத்துக்குக் கிடைத்த அரங்குகளின் எச்சில் துளி கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை.

கிடைத்த அரங்குகளில் பாலை இன்று (25/11/11) வெளியாகிறது. எமக்கு அரங்கு கொடுத்த அரங்க உரிமையாளர்கள்மேலாளர்கள்விநியோகஸ்தர்கள் மற்றும் இப்பணியில் தம்மை அளவுக்கு மீறி ஈடுபடுத்திக் கொண்டதால் மிக மோசமான உடல் உபாதையில் சிக்கித் தவிக்கும் என் இனிய நண்பர்செங்கோட்டை திரைப்பட இயக்குனர் சசிகுமார் உள்ளிட்ட அனைவருக்கும் எமது மனமுருகிய நன்றிகள்!

இக்கடிதத்தை எழுதுவதால் என்ன பலன் என எனக்குப் புரியவில்லை.

ஆனால்நான் ஒரு போதும் நம்பிக்கையை விடுவதில்லை. இயற்கையின் பேராற்றலை வேண்டுகிறேன். அப்பேராற்றலின் அங்கங்களாகவும் படைப்புகளாகவும் விளங்கும் மக்களை நம்புகிறேன்.

நாங்கள் பந்தயத்தில் பரிசு கேட்கவில்லை
நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்!

பாலை குழுவுக்காக,

ம.செந்தமிழன்


-------------------------------------------------------------------------------------------------------------------------
பாலை திரைப்படத்தை பார்த்த பிரபலங்களின் கருத்துத் தொகுப்பு!
-------------------------------------------------------------------------------------------------------------------------
 

2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் மக்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் பிரதிபலிக்கும் "பாலை" திரைப்படம் நாளை (நவம்பர் 25) தமிழகமெங்கும் வெளியாகிறது. ஆய்வாளரும்தமிழ் உணர்வாளருமான திரு. ம.செந்தமிழன் இயக்கிய இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்ட பிரபலங்கள் பலரது கருத்துகளும் தொகுக்கப்பட்டு வாசகர்களுக்காக அவை வழங்கப்படுகின்றன.

இயக்குநர் தங்கர் பச்சான்

 ‘
இப்படியொரு படத்தை தந்ததற்காக இயக்குநரையும்படக்குழுவினரையும் மனதார பாராட்டுகிறேன். இக்கதையின் கருவை அவர்கள் தேர்ந்தெடுத்த விதமே படத்தின் சிறப்பு. பெருமளவிலான பிரம்மாண்ட வரலாற்றுப் படங்களுக்கு சவால் விடும் படம் இது. இப்படத்திற்கு மிகப்பெரும் அங்கீகாரத்தை தமிழ் மக்கள் வழங்குவார்கள்

 இயக்குநர் வெ.சேகர்

 ‘
இந்தப் படத்தில் ஆயிரம் செய்திகள் சொல்லியிருக்கிறார்கள். பெரிய பொருட்செலவிலான பிரம்மாண்டமான படங்களுக்கு நிகராக எளிமையான இத்திரைப்படம் தமிழர்களை நெஞ்சு நிமிர்த்த வைக்கும்

 உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்

 ‘
வழமையான திரைப்படங்கள் நகர்ந்த வழியிலிருந்து செந்தமிழன் விலகியிருக்கிறார். ஒவ்வொரு நொடியும் எதிர்பார்ப்போடு கூடியஒரு திரைப்படம் உருவாக்கப் பட்டிருக்கிறது. ஐவகை நிலப்பிரிவு காலத்தில் வாழ்ந்த பழந்தமிழ்க் குடிகளின் வாழ்க்கை கொண்டுநிகழ்கால தமிழர்களுக்கு பாடம் சொல்லப்பட்டிருக்கிறது. மிக சிறப்பான ஒளிப்பதிவு படத்திற்கு உயிர் ஊட்டியிருக்கிறது. முதல் முயற்சியிலேயே இயக்குநர் ம.செந்தமிழன் முதிர்ச்சி அடைந்திருக்கிறார்

 கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்

 ‘
ஒவ்வொரு பிரேமிலும் நான் கண்ட முழுமையான தமிழ்ப்படம் இது. நாம் வாழும் இந்த மண் பல போராட்டங்களால் நம் முன்னோர்களால் மீட்கப்பட்ட மண் என்று இப்படம் உணர்த்துகின்றது. இன்றைய காலகட்டத்தில் இது முக்கியமான செய்தியும் கூட

 ஓவியர் புகழேந்தி

மிகவும் சிறப்பான தயாரிப்பு இது. வழக்கமான சினிமாப் படமாக இல்லாமல் வரலாற்று சினிமாவாக இப்படம் நிமிர்ந்து நிற்கும். சங்க இலக்கியத்திலிருந்து எடுத்தாளப்பட்ட இப்படத்தின் மூலம்
ஈழத்தின் இன்றைய அரசியல் நிலைமையோடு சரிவரப் பொறுந்துகிறது. நம் இன அடையாளத்தைத் தக்க வைக்க இது போன்ற படங்கள் தேவை.

 குமுதம் கார்டூனிஸ்ட் பாலா

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் வரலாற்றின் ஊடாகஈழத்தில் அழிக்கப்பட்ட ஒரு இனத்தின் கதையைப் பேசுகிறது இப்படம். நம்பவே முடியாத கிராபிக்ஸ் சாகச கதாநாயகக் காட்சிகளைப் பார்த்துக் காசைக் கரியாக்குபவர்கள் ஒருமுறை பாலை’ படத்தைப் பார்க்க வேண்டும். புதிய அனுபவமாக இருக்கும்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன்

எளிய வழியில் திரை ஊடகத்தின் வழியறிந்து சொல்லப்பட்டிருக்கிற செறிவான கதை. இசைஒளிப்பதிவு மிகைப்படாத நடிப்பு ஒரு உயர்தளத்தில் படத்தை வைத்து எண்ண வைக்கிறது.

 விடுதலைச் சிறுத்தைகள் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு

 
இந்தப் படத்தை விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் பார்க்க விரும்பினார். ஆனால்மக்களைவையில் பங்குபெற வேண்டியிருப்பதால்அவரால் இயலவில்லை. படம் குறித்து நான் அவரிடம் கைபேசியில் தெரிவித்த போதுஅப்பொழுதே படக்குழுவினரைப் பாராட்ட வேண்டுமென கூறினார் திருமா. இன்றைய தமிழ்ச் சூழலுக்கு தேவையான ஒரு படத்தை ம.செந்தமிழன் கொடுத்திருப்பதாகவும் அவர் சொன்னார்

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்

 
சங்க காலம் இப்படத்தில் அழகுற காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. மாற்று அரசியலும்மக்கள் கலையும்மாற்று திரைப்படமும் வெற்றி பெருதல் வேண்டும். நம் தோழர்களின் இம் முயற்சியை வெற்றியடையச் செய்வோம். இதுவே இந்தத் தலைமுறைத் தமிழர்களின் இயக்கம். மாற்றத்தை சாத்தியப்படுத்துவோம்

ஊடகங்கள்

புதிய தலைமுறை
வரலாற்றுத் திரைப்படமாக எடுக்கும் வழக்கம் ஹாலிவுட்டில் அதிகம். பாலை திரைப்படக் குழுவினர் முதல் முறையாக தமிழில் இம்முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.


சன் தொலைக்காட்சி 
சமீப காலமாக பல வரலாற்றுத் திரைப்படங்கள் வருகின்றன. ஆனால், அவற்றை எல்லாம் விஞ்சும் விதமாக 2300 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைக் காட்டுகிறது பாலை.

குமுதம்
பாலை திரைப்பட இயக்குநர் செந்தமிழன் பேசுவதைக் கேட்கும் போது, தமிழ் சினிமா ஆரோக்கியமான பாதையில் நடைபோடுகிறது என்ற நம்பிக்கை பிற்கிறது.

The Hindhu
Extensive reasearch on Sangam period literature, of life and time around 2,300 years ago, enabled director M.Senthamizhan to write Paalai

Tuesday, November 22, 2011

'டேம் 999' படத்தை தடை செய்ய வலியுறுத்தல்.......



       

               
                                       முல்லைப் பெரியாறு அணையை உடைக்கும் சதிதிட்டத்தின் ஒருபகுதியாக, 'டேம் 999' என்ற ஆங்கிலத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள மதிமுக பொதுச் செயலர் வைகோ, இப்படத்தை வெளியிட மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படுமானால், அதனை எதிர்த்துத் தடுத்து நிறுத்த, மதிமுக அறப்போரில் ஈடுபடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

கேரளத்தின் சதிகார சக்திகள், ஒரு திரைப்படத்தைத் தயாரித்து வெளியிடுவதற்கு, இவ்வளவு காலமும் ரகசியமாக வைத்திருந்து, படத்தைத் தயாரித்து, வருகின்ற 25 ஆம் தேதி, இந்தியாவிலும், ஐக்கிய அரபு நாடுகளிலும் வெளியிட இருக்கின்றனர். படத்தின் பெயர், டேம் 999. 

இந்தத் தலைப்பே விஷமத்தனமானது. முல்லைப்பெரியாறு அணையில் 999 ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டுக்குச் சட்டப்படியான உரிமை இருப்பதைக் காட்டுவதற்காகத்தான், இந்தத் தலைப்பை வைத்து உள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சியில், 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணை, உடைந்து நொறுங்குவது போலவும், பிரளயமாய் வெள்ளம் பாய்வது போலவும், லட்சக்கணக்கான மக்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட, பரிதாபமாகப் பலியாகி மடிவது போலவும் படத்தின் உச்சகட்டக் காட்சியை அமைத்து உள்ளனர்.

, நவ.22: டேம் 999 திரைப்படம் தமிழக திரையரங்குகளில் திரையிடப்படுமானால் அதை தடுத்து நிறுத்த மதிமுக அறப்போரில் ஈடுபடும் என அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தென்தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே படுநாசம் செய்யக்கூடிய விதத்தில், ஐந்து மாவட்டங்களுக்குப் பாசனத்துக்கு நீரும், குடிநீரும் வழங்கி வருகின்ற, பென்னி குக் கட்டிய முல்லைப்பெரியாறு அணையை எப்படியும் உடைத்தே விடுவது என்று கேரள அரசு முடிவு எடுத்து விட்டது.

2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ல், இந்தப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி உச்சநீதிமன்றம் அளித்த தீர்பபைக் காலில் போட்டு மிதித்து விட்டு, அணையை உடைப்பதற்கும் அதிகாரம் உண்டு என்று கேரளம், சட்டமன்றத்தில் ஒரு சட்டத்தையே நிறைவேற்றியது. தற்போது, அணையை உடைப்பதற்கு, 40 கோடி ரூபாய்களை ஒதுக்கி விட்டது. எந்த நேரத்திலும், தென்பாண்டி மண்டலத்துக்கு அந்த அபாயம் நேரிடலாம்.

கேரளம் கட்டுவதற்குத் திட்டமிட்டு உள்ள புதிய அணையில் இருந்து, தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டுத் தண்ணீரும் தர வாய்ப்பு இல்லை. ஏனெனில், புதிய அணை, பள்ளத்தில் அமையும்.

கேரள அரசின் அக்கிரமப் போக்கை, மத்திய அரசு கண்டுகொள்ளாததுடன், ஊக்குவிக்கும் வகையில், கேரளத்தினர் தயாரித்துக் கொடுத்த ஒரு அணை மசோதாவை நிறைவேற்றுவதற்கும் திட்டமிட்டு விட்டது.

திரைப்படம் மூலம் விஷமத்தனம்..

கேரளத்தின் சதிகார சக்திகள், ஒரு திரைப்படத்தைத் தயாரித்து வெளியிடுவதற்கு, இவ்வளவு காலமும் ரகசியமாக வைத்திருந்து, படத்தைத் தயாரித்து, வருகின்ற 25 ஆம் தேதி, இந்தியாவிலும், ஐக்கிய அரபு நாடுகளிலும் வெளியிட இருக்கின்றனர். படத்தின் பெயர், டேம் 999. 

இந்தத் தலைப்பே விஷமத்தனமானது. முல்லைப்பெரியாறு அணையில் 999 ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டுக்குச் சட்டப்படியான உரிமை இருப்பதைக் காட்டுவதற்காகத்தான், இந்தத் தலைப்பை வைத்து உள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சியில், 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணை, உடைந்து நொறுங்குவது போலவும், பிரளயமாய் வெள்ளம் பாய்வது போலவும், லட்சக்கணக்கான மக்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட, பரிதாபமாகப் பலியாகி மடிவது போலவும் படத்தின் உச்சகட்டக் காட்சியை அமைத்து உள்ளனர்.

கடந்த 1975-ல், சீனாவில், பாங்கியாவோ எனும் அணை உடைந்ததைப் பின்னணி அமைத்து உள்ளனர். இந்திய, ஹாலிவுட் நடிகர்களைக் கொண்டு, மலையாளிகள் முதலீடு செய்து, இப்படத்தைத் தயாரித்து உள்ளனர்.

அச்சுதானந்தன் முதல்வராக இருந்தபோது, முல்லைப்பெரியாறு அணை உடைவது போலவும், இலட்சக்கணக்கான மக்கள் சாவது போலவும் கிராஃபிக்ஸ் காட்சிகளை வடிவமைத்து, ஐந்து இலட்சம் குறுந்தகடுகளை, கேரளம் முழுமையும் வழங்கினர். முதல்வரின் இணையதளத்திலேயே இந்தப் போலிக் காட்சிகளைக் காண்பித்தனர். அதைத்தான் இப்போது, பிரமாண்டமான திரைப்படக் காட்சியாக அமைத்து வெளியிடுகின்றனர்.

அரிசி, பால், காய்கறிகள், இறைச்சி உள்ளிட்ட அனைத்து உணவுப் பண்டங்களும் கேரளத்துக்கு அனுப்பி, அவர்களுக்கு எல்லாவிதத்திலும் உதவியாக இருந்து வருகின்ற நம் தமிழ்நாட்டின் தலையில் கல்லைப் போட, என்ன நெஞ்சழுத்தம் அவர்களுக்கு இருக்க வேண்டும்?

முல்லைப் பெரியாறு அணையை உடைக்க சதி..

முல்லைப் பெரியாறு அணை, எத்தகைய நில நடுக்கத்துக்கும் ஈடு கொடுக்கக்கூடிய வலிமையோடு உள்ளது என்பதைத் தமிழகத்துப் பொறியாளர்கள், ஆணித்தரமான ஆதாரங்களோடு குறுந்தட்டாக ஆக்கி உள்ளனர். ஆயினும், நமக்கு உரிமை உள்ள அணையை உடைக்க, நம் வாழ்வில் மண்ணைப் போட, கேரளம் முடிவு செய்து விட்டது.

நம்மைச் சீண்டிப் பார்க்கிறார்கள். நம் முகத்திலேயே மிதிக்கவும் துணிந்து விட்டார்கள். கேரள மக்களை நாம் எதிரிகளாகக் கருதியது இல்லை. ஆனால், இப்பிரச்னையில் தொடக்கத்தில் இருந்தே அங்கு உள்ள அரசியல் கட்சிகளும், சில அக்கறை உள்ள சக்திகளும், ஒன்றிரண்டு பத்திரிகை நிறுவனங்களும், எப்படியும் முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என முடிவு செய்து, அந்தச் சதித்திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கின்றார்கள்.

இந்தப் படத்தில், புராண காலத்துச் சம்பவங்களையும், மனிதர்களின் உணர்ச்சிப் போராட்டங்களையும் இணைத்து, நம் முல்லைப் பெரியாறு அணை உடைவதால் பெருந்துயர் விளைந்தது என்று சித்தரித்து உள்ளனர். இதனைப் புத்தகமாகவும் வெளியிட்டு உள்ளனர். தமிழ்நாட்டிலும் இந்தப் படம் திரையிடப்படும் என்று விளம்பரம் செய்து உள்ளனர்.

தமிழ்நாட்டுக்குப் பெருங்கேடு செய்யயும் கேரளத்தின் திட்டத்தை,  எக்காளத்தோடு வெளிப்படுத்தும் இத்திரைப்படத்தை, தமிழ்நாட்டில் திரையிட, தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.

இந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க, கடுகு அளவு அக்கறையேனும் இந்திய அரசுக்கு இருக்குமானால், இந்தியாவில் எங்கும் திரையிட, மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது.

'இந்தத் திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிட அனுமதிக்காதீர்கள்' என்று, தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் சங்கம், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் ஆகிய அமைப்புகளுக்கு, இருகரம் கூப்பி வேண்டுகோள் விடுக்கின்றேன். அவர்களுக்குக் கடிதமும் அனுப்பி உள்ளேன்.

அனைத்தையும் மீறி, தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படுமானால், அதனை எதிர்த்துத் தடுத்து நிறுத்த, மறுமலர்ச்சி தி.மு.க. அறப்போரில் ஈடுபடும் என எச்சரிக்கின்றேன்," என்று வைகோ கூறியுள்ளார்.

ராமதாஸ் கோரிக்கை...

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "கேரளத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பணியாற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் ஆகியவற்றின் நிதி உதவியுடன் 'டேம் 999' என்ற பெயரில் ஆங்கில திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் இந்தியாவில் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.

முல்லைப் பெரியாற்று அணை உடைந்து பேரழிவு ஏற்படுவது போன்ற காட்சிகள் நிறைந்த இப்படம் வெளியானால் தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களிலும் பொது அமைதி பாதிக்கப்படும்.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று பல்வேறு வல்லுநர் குழுக்கள் ஏற்கனவே அறிக்கை அளித்துள்ள நிலையில் எப்படியாவது அந்த அணையை உடைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் 'டேம் 999' திரைப்படத்தை கேரள அரசு நிதி உதவி செய்து தயாரித்திருக்கிறது.

எனவே, இந்தத் திரைப்படத்தை இந்தியாவில் வெளியிட தடை விதிக்க வேண்டும். இதற்காக மத்திய அரசை தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையாக வலியுறுத்த வேண்டும்," என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

http://news.vikatan.com/index.php?nid=5099













திருமணம்......






அடைப்பு குறிக்குள்
அகப்பட்ட வாழ்கை...

உடைபட்ட
அடிமைச் சங்கிலி
புதிதாகப்பட்டது
பெண்ணுக்கு ....





Monday, November 21, 2011

இனிமேலேனும் தமிழனாய் ........



 


சாதியை விட்டு
சற்றேனும் விலகி வா !

கடவுள் மதம் விட்டு
கணமேனும் கடந்து வா !

மூடத்தை முற்றாய் விட்டு
முழுதாய் சிந்திக்க வா !

முனகலை விட்டு உன்
மூலத்தை தேடி வா !

பொன்னியின் மைந்தனாய்
பொங்கி வா தமிழா !!

புதைந்த நம் புறநானுற்றை
புவியோர்க்கு புலர்த்த வா !

காமத்தின் காதலை விட்டு
குறுந்தொகையில் குளித்து வா !

பழமையை பலிகொடுத்து
புதிதாய் பிறந்து வா ....!!





Blogger Widgets