
குழந்தைகளை பள்ளிக்கனுப்பும்
தாய்களின் முக மலர்ச்சியும்,
பள்ளியிலிருந்து வீடு திரும்பும்
சேய்களின் முக மலர்ச்சியும்
ஒன்றைப் போலவே தெரிகின்றன.
------------------------------
காவல் நிலையங்களும்,
நீதி மன்றங்களும்
இல்லாத தேசத்தில்
வாழ்ந்து மடிய ஆசை.
------------------------------
சூரியன் உதிக்காத வீட்டில்
தங்கிப் பயிலும்
அரும்பு மீசைகளுக்கு,
தேவையெல்லாம்
கொஞ்சம் உணவும்,
பை நிறைய கனவுமே.
------------------------------
ஒட்டளித்தவனும்,
ஓட்டு வாங்கியவனும்
தூங்குவதாக நடிப்பவர்கள்.
அவர்களை எழுப்ப முடியாது.
வேண்டுமானால் அடிக்கலாம்.
------------------------------
கடவுள் பெயரில்
காணிக்கை வடிவில்
கவுரவப் பிச்சைகள்
அனுமதிக்கப் படுகின்றன.
------------------------------
ஐயப்பசாமி
பக்தனின் வேண்டுகோளுக்கு
செவிச் சாய்த்து
தனி தம்ளரில்
தண்ணியடிக்க
அனுமதிக்கிறது.
------------------------------

உண்ணாவிரதம்
பலவேளைகளில்
திகைக்கவைக்கும்.
மூன்று மணிநேர
உண்ணாவிரதம்
வாழ்நாளெல்லாம்
நடுங்க வைக்கும்.
நகைக்க வைக்கும்.
------------------------------
பெற்றோரைப் பகைத்து
காதலில் செயித்தவர்கள்
பரீட்சையில் தேர்வாகி,
கல்லூரியில் இடம்
கிடைக்காதவரைப் போல
மனம் வாடுகிறார்கள்.
------------------------------
- அகரத்தான்.
5 comments:
//காவல் நிலையங்களும்,
நீதி மன்றங்களும்
இல்லாத தேசத்தில்
வாழ்ந்து மடிய ஆசை. //
இதை படிக்கும் போது எனக்கு அந்த ஆசை வருகிறது நண்பா......
உங்க பிளாக் டிசைன் சூப்பரா இருக்கு....
அந்த விளக்கு சூப்பர்.
கருத்துரைக்கு நன்றி நண்பரே
//காவல் நிலையங்களும்,
நீதி மன்றங்களும்
இல்லாத தேசத்தில்
வாழ்ந்து மடிய ஆசை.
//
இது பேராசை
உங்களுக்கு மிகவும் பயனுள்ள இனையதளங்கள் பகுதி - 1 மிகவும் பயனுள்ளதாக இருந்தது ராஜா ....
Post a Comment