Saturday, January 28, 2012

மோடியா ,அத்வானியா..????
ஈழதமிழர்கள் பிரச்சனையை தீர்ப்பதில் மத்திய அரசு உறுதியுடன் இருக்கிறது . சமீபத்தில் இலங்கை பயணம் மேற்கொண்ட வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா பல திட்டங்களை துவக்கி வைத்துள்ளார் .


       -    தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்

     
ஈழதமிழர் பிரச்சனையை தீர்ப்பதிலா  இல்லை ஈழதமிழர்களையே தீர்பப்திலா என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும்.

             ------------------------------------------------------------------------------
வருங்காலத்தில் பெரிய அளவில் அரசியல் மாற்றங்கள் ஏற்படும் பார்லிமென்ட் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் நாடு இப்போது சிக்கலான நிலையில் உள்ளது இந்த சிக்கலை தீர்க்கும் வல்லமை பா.ஜ., வுக்கு மட்டும் தான் உண்டு மத்தியில் மீண்டும் பா.ஜ., தலைமை ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை

 -    தமிழக பா .ஜ ., தலைவர் பொன் . ராதாகிருஷ்ணன்

  முதலில் உங்கள் பிரதமர் வேட்பாளர் மோடியா ,அத்வானியா என்பதை தெளிவுபடுத்துங்கள் ...!!

         -------------------------------------------------------------------------------------


       ராமதாஸ் மீது பொய்யான புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை போலீஸ் ரத்து செய்ய வேண்டும் இந்த பொய்யான புகாரை அளித்தவர் மீதும் அவரை தூண்டிவிட்டவர்கள் மீதும் உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

              -    பா.ம.க.,தலைவர் ஜி.கே மணி

  ராமதாஸ் என்ன கடவுளின் அவதாரமா தப்பே செய்யமாட்டாரா ?? நீங்களே பொய்யான புகார் என்று முடிவு பண்ணிட்டா அப்ப காவல்துறை எதுக்கு நீதிமன்றம் எதுக்கு தலைவரே .???

                      ----------------------------------------------------------------Wednesday, January 25, 2012

தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? ( ஒரு சிலரை தவிர )        தமிழ் மக்கள் நலமாக வாழ வேண்டும் என்று தனது சொத்துகளை விற்றும் தனது மக்களை இழந்தும் முல்லை பெரியாறு அணையை கட்டி எழுப்பிய பென்னி குய்க் அவர்களை நினைவு கூறும் தை மாதத்தில் ஒரு சில நம்பிக்கை துரோகிகளையும் நாம் நினைவு படுத்த வேண்டியுள்ளது.   தமிழ்,தமிழன் என்று தான் நடிக்கும் படத்தில் வசனம் பேசி கொண்டும் தமிழர்களுக்கு தான் தான் பாதுகாவலன் என்பது போல் நடந்துகொள்ளும் நடிகர்கள் , தமிழ் உணர்வை தூண்டிவிட்டு அதை படத்தில் வைத்து படத்தை ஓட்டும் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் இது போன்ற எத்தனையோ பேரை தமிழ் மக்களின் பணம் வாழ வைத்து கொண்டிருக்கிறது. .

       

     எத்தனையோ பிரச்சனைகளில் முதல் ஆட்களாக குரல் கொடுக்கும் இவர்கள் முல்லை பெரியார் அணை பிரச்சனையில் குரல் கொடுக்காததற்க்கு ஒரே ஒரு கரணம் மட்டுமே  அது பணம்.


        மலையாளிகள் நடத்தும் நகை கடைகளில் பிரான்ட் அம்பாசிடராக தன்னை காட்டிக்கொண்டு கொள்ளை காசு பார்க்கும் இவர்கள் எப்படி மலையாளிகளுக்கு எதிராக குரல் கொடுப்பார்கள் என்று நாம் நம்பமுடியும் கேரளாவில் தான் நடிக்கும் படம் ஓட வேண்டும் கர்நாடகாவில் ஓட வேண்டும் ,ஆந்திராவில் ஓட வேண்டும் பின் எப்படி நமக்காக குரல் கொடுப்பார்கள்.    படத்தை ஒட்டவும் தன்னை பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ளவும் தமிழ் மக்கள் வேண்டும் தனது வருமானம் குறைகிறது என்றால் மட்டும் தமிழக மக்களை கண்டுகொள்ளமாட்டார்கள் இவர்களுக்கு நம் மக்கள் ரசிகர் மன்றம் வைத்து தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகின்றனர் அவர்களும் திருந்த போவது இல்லை நாமும் திருத்திகொள்ளபோவதுமில்லை.

  இனியாவது இவர்களுக்கு ரசிகர் மன்றம் வைப்பதும் பால் அபிஷேகம் பண்ணுவதையும் நிறுத்தி உணர்வுள்ள தமிழனாக வாழ பழகுவோமாக.

மானத்தை தொலைத்து
பாதுகாப்பாய் இருப்பதைவிட
மானத்தோடு செத்து
மறித்திருக்கலாமே ..!!! 
Saturday, January 21, 2012

படுகர் இன திருவிழாவும்... இன்றைய தமிழர் நிலையும் ....
       படுகாஸ்( Padukaas ) என்று அழைக்கப்படும் படுகர் இன திருவிழாவை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் நண்பர் சந்திரகுமார் அவர்கள் அழைப்பின் மூலம் கிடைத்தது.


       உதகை அருவங்காட்டுக்கு ( Aruvankadu ) அருகில் இருக்கும் ஜெகதளா ( Jagathala )  என்னும் படுகர் கிராமத்திற்கு நண்பரின் அழைப்பின் பேரில் சென்றோம் .


          அந்த ஊருக்குள் நுழைந்ததுமே திருவிழாக்கோலம் பூண்டிருந்த அந்த கிராமத்தை காணவே அழகாக இருந்தது ஆண்கள் எல்லாரும் வெள்ளை வேட்டி வெள்ளை சர்ட்டிலும் பெண்கள் வெள்ளை வேட்டியை உடம்பில் போர்த்திக்கொண்டும் இருந்தது அவர்களது வெள்ளந்தியான மனதை உணர்த்துவது போல் இருந்தது அவர்கள் உபசரிப்பும் அதுபோலவே .


         ஏழு கிராமங்கள் ஒன்று சேர்ந்து கெத்தையம்மன் என்னும் கடவுளுக்கு திருவிழா எடுத்து கொண்டாடினர் அனைவரும் ஒன்று சேர்ந்து நடத்திய திருவிழா அவர்களது ஒற்றுமையை உணர்த்தியது .

அனைத்தையும் விட முக்கியமான விசயம் அவர்களது மகிழ்ச்சி படுகாஸ் இன பாடல்களே . அவர்களது அனைத்து பாடல்களுமே நடனம் ஆட ஏதுவாக இருக்கும் ஆண்கள் பெண்கள் பாகுபாடு இல்லாமல் பறை அடிக்கும் பாட்டு கச்சேரியில் ஒலித்த பாடல்களுக்கும் நடனம் ஆடியது கண்கொள்ள கட்சியாக இருந்தது .சிறு வயது முதல் பெரிய வயது உள்ள அனைவருக்கும் நடனம் இயல்பாகவே வருகிறது. நடுங்க வைக்கும் குளிரிலும் இரவு 11 மணிவரை நிகழ்ச்சிகள் நடந்தாலும் கூட்டம் குறையாமல் ஒற்றுமையாக இருந்து திருவிழாவை நடத்தியது அவர்களது ஒற்றுமையை உணர்த்தியது. அவர்களது கிராமத்தில் வேறு இனத்தவர் எவரும் நிலம் வாங்கவோ குடியிருக்கவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது .

       
        இன்று தமிழன் தனது சொந்த அடையாளத்தை மறந்து மேற்கத்திய கலாசாரத்திற்கு மாறி வெகு நாட்களாகிவிட்டது. இன்று பெரும்பாலான குழந்தைகளுக்கு தமிழ் பெயரும் இல்லை தமிழ் சரியாக பேச வருவதும் இல்லை .நமது அடையாளத்தை நாம் தொலைத்து தொலைந்து கொண்டிருக்கையில் படுகர் இன மக்களின் கலாச்சாரம் மாறாத பண்டிகை கொண்டாட்டம் மற்றும் ஒற்றுமையை காண்கையில்  அவர்களை பற்றிய எண்ணம இன்னும் அதிகமானது .....
Wednesday, January 18, 2012

ஆளை விழுங்கும் மர்ம மலை நமது ஊரில் ....


       பெர்முடா முக்கோணம் பற்றி கேள்விபட்டிரிப்பீர்கள் அந்த முக்கோண பகுதிக்குள் எது சென்றாலும் காணாமல் சென்று விடும் .இதை பற்றி எத்தனையோ ஆராய்ச்சிகள் நடந்து வரும் வேளையில் நமது ஊரிலும் அதே போன்று ஒரு இடம் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா .

ஆம் இதுவரை அதிகம் அறியப்படாத இடம் ..

 நாங்கள் குடும்பத்துடன் ஊட்டி சுற்றுலா சென்று விட்டு நண்பனின் வேண்டுகொளுக்கிணங்க ஊட்டி to கூடலூர் செல்லும் சாலையில் 23 வது கிலோமீட்டரில் ஊசி மலை என்னும் வியு பாயிண்ட் உள்ளது அங்கே சென்று பார்க்கலாம் என்று சென்ற பொது அங்குள்ளவர்களால் அறியப்பட்ட அதிர்ச்சியான தகவல் இது

கூடலூர் ( cudalore )செல்லும் சாலையில் இயற்கை அழகு கொட்டி கிடக்கும் ஊட்டியில் ( ootty ) இருந்து செல்லும் பொது பைக்கார (paikkara), நடுவட்டம்( Naduvattam ) தாண்டி 23 வது கிலோமீட்டரில் தவளை மலை ( Thavalamlai ) அதற்கடுத்து ஊசி மலை ( Uusimalai ) உள்ளது அதன் தொடர்ச்சியாக அதற்கடுத்து ஒரு பெயரிடப்படாத ஒரு மலை உள்ளது இந்த மலையின் மேல் பகுதியில் ஆள் நடமாட்டமோ விலங்குகள் நடமாட்டமோ சுத்தமாக கிடையாது . இந்த மலையின் குறிப்பிட்ட பகுதியை தாண்டி மேல்பகுதிக்கு செல்ல முயன்ற எத்தனையோ பேர் அந்த குறிப்பிட்ட பகுதிக்கு செல்ல முடியாமலே காணாமல் போயுள்ளனராம் .


( மர்ம மலை )

இதுவரை வெளியில் தெரியாமலே பல ஆராய்ச்சிகள் உள்நாட்டு விஞ்ஞானிகள் மற்றும் வெளிநாட்டினரால் நடத்தப்பட்டுள்ளன  என்றும் ஆனால் இந்த மர்மத்தை பற்றி அறியமுடியவில்லை எனவும் கூறுகின்றனர்.

பலபேர் காணாமல் போயுள்ள நிலையில் கடைசியாக கொஞ்சம் நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவை சார்ந்த இருவர் இந்த மலையை பற்றி ஆராய வந்தனர் என்றும் இவர்கள் வனத்துறை காவலர் ஒருவர் உட்பட மூவர் வீடியோ காமாரவுடன் அந்த மலையின் உச்சிக்கு செல்ல போனவர்கள் இது வரை திரும்ப வில்லை என்றும் கூறப்படுகிறது .

இந்த மலையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு விதமான மூலிகை செடி உள்ளது எனவும் அது அங்கு செல்லும் ஆட்கள் மற்றும் விலங்குகளை மறைத்து விடுகிறது எனவும் இங்குள்ளவர்கள் கூறுகின்றனர் ..உங்களுக்கும் வாய்ப்பிருந்தால் ஒருமுறை சென்று வாருங்கள் ....


Friday, January 13, 2012

புகை பிடிப்பதினால் ஏற்படும் நன்மைகள் ...
புகை பிடிப்பதினால் ஏற்படும் தீமைகளைதான் இது வரை படித்து வந்திருப்பீர்கள் ஆனால் இதனால் ஏற்படும் நன்மைகளை அறிந்திருபீர்களா என்பது தெரியவில்லை தொடர்ந்து படியுங்கள்

புகை பிடிப்பதினால் ஏற்படும் நன்மைகள்...

1) இலவச சுற்றுலா :- அதாவது விதவிதமான கேன்சர் மருத்துவமனைகளுக்கு குடும்ப உறுப்பினர்களின் செலவில் இலவச சுற்றுலா சென்று வரலாம் ..

( உலகளவில் இறப்பிற்கு இரண்டாம் மிகப்பெரிய காரணமாக புகையிலை பயன்படுத்துவது அமைந்துள்ளது. புகைபிடிப்போரில் பாதிக்கும் மேலானவர்கள் புகையிலை சம்பந்தப்பட்ட நோய்களினாலேயே இறக்கின்றனர்.)


2) பிறர்க்கு உதவி :- அதாவது தமக்கிருப்பதை பிறர்க்கு கொடுத்து உதவு என்பதை போல தாம் பிடித்து வெளியே விடும் புகையினால் அருகில் இருப்பவருக்கும் நோயை கொடுக்கலாம் .

( வாரத்துக்கு நாற்பது மணி நேரம் சிகரெட் புகை உலவும் இடங்களில் இருப்பவர்கள், தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் அத்தகைய ஒரு சூழலில் இருக்க நேர்ந்தால் அவர்களுக்கு நுரையீரல் புற்று நோய் உட்பட பல நோய்கள் தாக்குகின்றன. )

3) திருட்டை தடுத்தல் :- தொடர்ந்து புகை பிடிப்பதினால் ஏற்படும் தொடர் இருமலால் இரவு திருடன் வருவதை தடுத்து சொத்தை காப்பாற்றலாம் .

( புகை பிடித்தல் தனி மனிதனை மட்டுமன்றி சமூகத்தையும் பாதிக்கிறது என்பதும் நமக்குத் தெரிந்ததே. சீனாவில் மட்டுமே இருபது இலட்சம் பேர் புகை பாதித்து மரணமடையும் வாய்ப்பு இருக்கிறதாம் )

4) சிகரெட் கம்பெனி முதலாளிகளையும் சில்லறை விற்பனையாளர்களையும் மேலும் மேலும் பணக்காரர்களாக்க தொடர்ந்து சிகரெட் வாங்கி உதவலாம் .

( புகை பழக்கத்துக்கு அடிமையான பலர் பிற்காலத்தில் அதிலிருந்து விடுபட புகையிலை மெல்லும் பழக்கத்துக்குத் தாவி விடுகின்றனர். அது புகை பிடிப்பதை விட அதிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என நியூயார்க் ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. )

5)ஆண்மை குறைபாடு , வாய் துர்நாற்றம் போன்றவற்றை ஏற்படுத்தி கொண்டு மனைவி விரைவில் விவாகரத்து கேட்க உதவலாம் .

( மூளையில் பரவும் நிக்கோட்டின் புகை எல்லோருடைய மூளையிலும் ஒரே போன்ற மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை. சிலருக்கு அது எந்த மாற்றத்தையும் செய்யாமல், சிலரிடம் அதிகப்படியான மாற்றத்தை நிகழ்த்தி விடுகிறது )

மாசில்லா காற்றை சுவாசிப்பது மனிதருக்கான பிறப்புரிமை, அது புகைபிடிக்கும் சிறு பான்மையினரால் பறிக்கப்படுவது வருந்தத்தக்கது.
புகை பிடித்தலின் தீமைகளும், அதை விலக்கும், தவிர்க்கும் முறைகளும் அனைவருக்கும் தெரிந்திருந்தும் அது குறித்த விழிப்புணர்வை பல வேளைகளில் இளைய தலைமுறையினருக்கு நாம் ஏற்படுத்துவதில்லை

புகை பிடிப்பது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கெடுதல்.

இன்றே விலக்குவீர்,வாழ்வீர் பல்லாண்டு !!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மக்கா மறக்காம பின்னூட்டம் இடுங்க..!!!!! 

Thursday, January 12, 2012

வீர துறவி விவேகானந்தர் பிறந்த நாளை நினைவு கூர்வோம்.....
விவேகானந்தரின் அறிவுரைகள்

நீ எதை நினக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே நீ ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகி விடுவாய்!
இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே! என்னால் இயலாது என்று ஒரு நாளும் சொல்லாதே!. ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன். உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும் பொழுது, காலமும், இடமும் கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும் எல்லவாற்றையும் சாதிக்க கூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ.

பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்துச் சிந்திப்பதல்ல. மாறாக, வலிமையைக் குறித்து சிந்திப்பதுதான். மக்களுக்கு, ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமயைப்பற்றி போதிப்பாயாக.

இந்த உலகம் மிகப்பெரிய உடற்பயிற்சிக்கூடம். இங்கு நாம் நம்மை வலிமையுடைவர்களாக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம்.

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்
மனது அமைதியாக ஒருமுகப்படப்பட அதன் ஆற்றல் அதிகமாக ஒரே இடத்தில் செலுத்தப்படுகிறது. இதுதான் மனதின் ஆற்றலைப் பற்றிய இரகசியமாகும்”.

உன் மனச்சாட்சிதான் உன்ககு ஆசான். அதைவிடச் சிறந்த ஆசான் உலகில் இல்லை உனக்காக

தத்துவ ஞானம் எது பேசினாலும் பேசுக;

பிராமணவாதம் எதனைக் கொள்ளினும் கொள்ளுக;

உலகிலே மரணம் என்பது இருக்கும் வரையும்

மனித இதயத்திலே பலவீனம் இருக்கும் வரையும்

அந்த பலவீனத்திலே மனிதனுடைய இதயத்தில் இருந்து அழுக்குரல்
வரும் வரையில் ஆண்டவனிடத்தில் நம்பிக்கை இருந்தே தீரும்
தன்னிடம் நம்பிக்கை இல்லாதவன் தான் நாத்திகன்
அளவுக்கு அதிகமாக உண்ணாதீர்கள். அதற்காக பட்டினியும் கிடக்க வேண்டாம்.
அதிக நேரம் தூங்காதீர்கள். அதற்காக மிகக் குறைவாகவும் தூங்க வேண்டாம்.
பொறாமை குணம் இருந்தால் விரட்டி விடுங்கள்.
சந்தேகமும், சஞ்சலபமும்தான் உங்கள் முதல் எதிரிகள். அவற்றை துரத்தியடியுங்கள்.
சோம்பல் உங்களிடம் இருந்தால் முதலில் அதை ஒழித்துக் கட்டுங்கள்.
எந்த சூழ்நிலையிலும் பேராசை கொள்ளாதீர்கள்.
உடல் தூய்மை முக்கியமானது. அதனால் தினமும் குளியுங்கள்.
எப்போதும் நல்லதை மட்டுமே மனதால் நினையுங்கள். அப்போது நல்லவை மாத்திரமே நடக்கும். நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடமே இருக்கிறது.
எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். தைரியமாகவும் இருக்க பழகிடுங்கள்.
பொறுமையும், விடா முயற்சியும் நமது நல்ல நண்பர்கள். எப்போதும் இவற்றுடனேயே இணைந்திருக்கப் பழகுங்கள்.Wednesday, January 11, 2012

“யோக்கியன் வர்றான்"
செய்தி : பாக்; கில் பின்லேடன் பதுங்கல் : தெரியாது என்கிறார் முஷாரப்


நாம :  பின்லேடன் பதுங்கல் தெரியாது , தாவூத் இருப்பது தெரியாது , கார்கில் ஆக்கிரமிப்பு தெரியாது எதுவுமே தெரியாது என்பதற்கு எங்கள் மன்மோகன்சிங்கே தேவலை போலிருக்கே ...!!!
       ---------------------------செய்தி : டெஸ்ட் தர வரிசை இந்தியா பின்னடைவு ..


நாம : ஊழல்ல தொடர்ந்து முதல் இடத்தை நோக்கி ....
கலக்குரோமல்ல ,......
      ----------------------------------

செய்தி: ஊழல் குற்றசாட்டால் மாயாவதி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட பாபு சிங் குஷ்வாகா காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்தார் . ஆனால் ஊழல் கரை படிந்த எந்த ஒரு நபரையும் சேர்க்க மாட்டோம் என்பதை அவரிடம் தெளிவாக தெரிவித்துவிட்டோம்
                                                – ராகுல் காந்தி

நாம :  “யோக்கியன் வர்றான்  சொம்பெடுத்து உள்ளே வைங்கனாங்களாம்”  உங்க கட்சியாலதான் நாடே நாறி கிடக்குது . வாரம் ஒருத்தர் ஊழல் வழக்குல உள்ளே போய்கிட்டு இருக்காங்க இதுல பெருசா பேச வந்துட்டாரு .....
        ----------------------------------------
Tuesday, January 10, 2012

முயற்சி...!!!

எழுந்து பார்க்கும் வரை

பள்ளத்தின் ஆழம்

குறைவதில்லை.......தன்மை...

உப்பு கரிப்பதுண்டோ

உழையாரின்

வியர்வைத் துளி......... 


Saturday, January 7, 2012

இந்த வார காமெடி பீஸ் .......
என் மகள் கனிமொழி ( Kanimozhi )கலைஞர் ' டிவி' வாசல் படியை கூட மிதித்து இல்லை .ஆ.ராஜாவின் அலுவலகத்துக்கும் போனது கிடையாது . ஸ்பெக்ட்ரம் பற்றி ஒன்றும் தெரியாது . திகார் சிறையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்துள்ளார் . கட்சிக்காக தான் அவர் இவ்வளவு தண்டனைகளையும் சோதனைகளையும் அனுபவித்து வருகிறார் ......

         -  தி.மு. க ., தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள்Thursday, January 5, 2012

விஜய் டிவி யின் ஒரு கோடி ஏமாற்று வேலை .....

தலைப்பைச் சேருங்கள்


Tuesday, January 3, 2012

புத்தாண்டு.....!!!!

 


காவிரி பிரச்சினை  
பாலாறு பிரச்சினை 
முல்லைப் பெரியாறு பிரச்சினை  
ஈழத் தமிழர்  படுகொலை 
தமிழக மீனவர் படுகொலை 
மூன்று தமிழர் உயிர்காப்பு 
கூடங்குளம் அணு உலை 
கார்பரேட்  நலன் 
அந்நிய முதலீட்டுக்கு நூறு சதவீத அனுமதி 
தேசப் பாதுகாப்பில் கொள்ளையடித்தவனை 
பிடிக்க முடியவில்லை 
என வழக்கை முடித்து விடுதல்
லோக்பால் மசோதாவில் 
கார்பரேட்டுகளுக்கு விதிவிலக்கு 
ஊழல் வழக்கில் சிறையிலிருப்பவனை 
வெளியே விட கொல்லைப்புற பிரதமர் 
நீதிமன்றத்தில் கெஞ்சுதல் 

அதே உளுத்த மக்களாட்சி தத்துவம் 
அதே மக்கள் விரோத செயல்பாடு 
அதே திருடர்களின் காட்டாட்சி 

புதியனவென்று ஒன்றுமில்லை 
நாட்காட்டியின் வயதொன்று 
கூடுவதைத் தவிர.   

                                - அகரத்தான். 

Monday, January 2, 2012

வானிலை,புயல் (cyclone) நிலவரங்களை சுயமாக கண்டுபிடிக்க.......            'தானே' இந்த பெயரை கேட்டாலே புதுச்சேரியும் கடலூரும் ஆடிப்போயுள்ளது அந்த அளவுக்கு 'தானே' புயல் கோரதாண்டவம் ஆடியுள்ளது . கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அணைத்து தொலைகாட்சி சேனல்களிலும் வானிலை அதிகாரி ரமணன் அவர்களின் பேட்டியே பிரதானம் அந்த அளவுக்கு புயல் பீதி கடலோர மாவட்டங்களில் நிலவியது .. இனி புயல் , வானிலை நிலவரங்களை நம்மால் இணையத்தில் பார்த்து அறிந்துகொள்ள ஒரு இணையதள முகவரி உள்ளது
http://www.woeurope.eu/cgi-app/satellite?LANG=eu&STRUCTUR=_&CREG=igms&CONT=asie&BIG=1&LOOP=12&ZEIT=௨௦௧௨௦௧௦௨௧௪௦௦

மேற்கண்ட முகவரியில் உள்நுழைந்து loop என்கிற சொடுக்கியை அழுத்தி adjust speed என்பதில் slower or faster என்பதை தேர்ந்தெடுத்தால் வானம் மேக மூட்டமாக உள்ளதா புயல் இருந்தால் அதன் நிலவரம் போன்றவைகளின் அப்போதைய நிலவரத்தை அறிந்து கொள்ளலாம் .......


Blogger Widgets