“நீ எதை நினக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே நீ ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகி விடுவாய்!

இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே! என்னால் இயலாது என்று ஒரு நாளும்
சொல்லாதே!. ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன். உன்னுடைய உண்மை இயல்போடு
ஒப்பிடும் பொழுது, காலமும், இடமும் கூட உனக்கு ஒரு
பொருட்டல்ல. நீ எதையும் எல்லவாற்றையும் சாதிக்க கூடியவன். சர்வ வல்லமை படைத்தவன்
நீ.”
“பலவீனத்திற்கான
பரிகாரம், ஓயாது
பலவீனத்தைக் குறித்துச் சிந்திப்பதல்ல. மாறாக, வலிமையைக் குறித்து சிந்திப்பதுதான். மக்களுக்கு, ஏற்கனவே அவர்களுக்குள்
இருந்து வரும் வலிமயைப்பற்றி போதிப்பாயாக.
“இந்த
உலகம் மிகப்பெரிய உடற்பயிற்சிக்கூடம். இங்கு நாம் நம்மை வலிமையுடைவர்களாக்கிக்
கொள்வதற்காக வந்திருக்கிறோம்.
“தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய
மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு
இருந்தாக வேண்டும்”
“மனது
அமைதியாக ஒருமுகப்படப்பட அதன் ஆற்றல் அதிகமாக ஒரே இடத்தில் செலுத்தப்படுகிறது.
இதுதான் மனதின் ஆற்றலைப் பற்றிய இரகசியமாகும்”.
உன் மனச்சாட்சிதான்
உன்ககு ஆசான். அதைவிடச் சிறந்த ஆசான் உலகில் இல்லை உனக்காக
தத்துவ ஞானம் எது பேசினாலும் பேசுக;
பிராமணவாதம் எதனைக் கொள்ளினும் கொள்ளுக;
உலகிலே மரணம் என்பது இருக்கும் வரையும்
மனித இதயத்திலே பலவீனம் இருக்கும் வரையும்
அந்த பலவீனத்திலே மனிதனுடைய இதயத்தில் இருந்து அழுக்குரல்
தத்துவ ஞானம் எது பேசினாலும் பேசுக;
பிராமணவாதம் எதனைக் கொள்ளினும் கொள்ளுக;
உலகிலே மரணம் என்பது இருக்கும் வரையும்
மனித இதயத்திலே பலவீனம் இருக்கும் வரையும்
அந்த பலவீனத்திலே மனிதனுடைய இதயத்தில் இருந்து அழுக்குரல்
வரும் வரையில்
ஆண்டவனிடத்தில் நம்பிக்கை இருந்தே தீரும்
தன்னிடம் நம்பிக்கை இல்லாதவன் தான் நாத்திகன்
தன்னிடம் நம்பிக்கை இல்லாதவன் தான் நாத்திகன்
அளவுக்கு
அதிகமாக உண்ணாதீர்கள். அதற்காக பட்டினியும் கிடக்க வேண்டாம்.
அதிக நேரம் தூங்காதீர்கள்.
அதற்காக மிகக் குறைவாகவும் தூங்க வேண்டாம்.
பொறாமை குணம் இருந்தால்
விரட்டி விடுங்கள்.
சந்தேகமும், சஞ்சலபமும்தான் உங்கள் முதல்
எதிரிகள். அவற்றை துரத்தியடியுங்கள்.
சோம்பல் உங்களிடம் இருந்தால்
முதலில் அதை ஒழித்துக் கட்டுங்கள்.
எந்த சூழ்நிலையிலும் பேராசை
கொள்ளாதீர்கள்.
உடல் தூய்மை முக்கியமானது.
அதனால் தினமும் குளியுங்கள்.
எப்போதும் நல்லதை மட்டுமே
மனதால் நினையுங்கள். அப்போது நல்லவை மாத்திரமே நடக்கும். நினைக்கும் பொருளாகவே
ஆகும் தன்மை நம்மிடமே இருக்கிறது.
எப்போதும் மகிழ்ச்சியாக
இருங்கள். தைரியமாகவும் இருக்க பழகிடுங்கள்.
பொறுமையும், விடா முயற்சியும் நமது நல்ல
நண்பர்கள். எப்போதும் இவற்றுடனேயே இணைந்திருக்கப் பழகுங்கள்.
1 comment:
விவேகானந்தரின் சொற்கள் தன்னம்பிக்கையை கொடுக்ககூடியது
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே
Post a Comment