
காவிரி பிரச்சினை
பாலாறு பிரச்சினை
முல்லைப் பெரியாறு பிரச்சினை
ஈழத் தமிழர் படுகொலை
தமிழக மீனவர் படுகொலை
மூன்று தமிழர் உயிர்காப்பு
கூடங்குளம் அணு உலை
கார்பரேட் நலன்
அந்நிய முதலீட்டுக்கு நூறு சதவீத அனுமதி
தேசப் பாதுகாப்பில் கொள்ளையடித்தவனை
பிடிக்க முடியவில்லை
என வழக்கை முடித்து விடுதல்
லோக்பால் மசோதாவில்
கார்பரேட்டுகளுக்கு விதிவிலக்கு
ஊழல் வழக்கில் சிறையிலிருப்பவனை
வெளியே விட கொல்லைப்புற பிரதமர்
நீதிமன்றத்தில் கெஞ்சுதல்
அதே உளுத்த மக்களாட்சி தத்துவம்
அதே மக்கள் விரோத செயல்பாடு
அதே திருடர்களின் காட்டாட்சி
புதியனவென்று ஒன்றுமில்லை
நாட்காட்டியின் வயதொன்று
கூடுவதைத் தவிர.
2 comments:
உண்மை...உண்மை..உண்மை
தன்மானம் உள்ளவர்களின் மனசாட்சி இது.இனி வரும் காலமாவது நாம் இனம்கை ஓங்கட்டும்.
நன்றி நண்பரே .........
Post a Comment