செய்தி - பொது விவாதத்திற்கு தயாரா சோனியாவிற்கு ஹசாரே சவால்
பாமரன் - தயார்தான் ஆனால் லோக்பால் , 2 ஜி பற்றியெல்லாம் பேசக்கூடாது சரியா
------------------
செய்தி - பிரதமருக்கு கருப்புகொடி விஜயகாந்த் அதிரடி
பாமரன் - காவேரி,மீனவர் பிரச்சனைகளில் வாய் திறக்காதவர் கருப்புகொடிக்காக முல்லை பெரியார் பிரச்சனை பற்றி பேசவா போகிறார் ,அப்படியே வெள்ளை சிவப்பு வண்ண கொடிகளையும் சேர்த்து காட்டினால் கூட்டணி பற்றியாவது வாய் திறக்கட்டும்
------------------
செய்தி - தமிழகத்திற்கு மத்திய அரசு அநீதி பிரதமருக்கு வைகோ கடிதம்
பாமரன் - அது காலங்காலமாக நடக்கிறதுதானே புதுசா என்ன சொல்லவரீங்க அதை சொல்லுங்க
---------------
இந்த வார காமெடி பீஸ்
-----------------------------

கருணாநிதி - முல்லை பெரியாறு அணை சம்மந்தமாக நடந்த மனித சங்கிலியில் கலந்து கொள்ளாததற்கு அவர் மத்திய அமைச்சர் என்பதுதான் காரணம் பார்லிமென்டில் வரும் கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டிய பொறுப்பு இருப்பதால் அதை தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அழகிரி வரவில்லை . என்று வெட்கப்படாமல் பேட்டி அளித்ததற்கு ..........
அய்யோ ... அய்யோ ....
1 comment:
வாழ்த்துகள், நம்ம ஊர்க்காரர்னாலே சந்தோஷம் தான்
Post a Comment