Thursday, July 19, 2012

தூக்கு கயிறு




புதிய சட்டங்கள் அமலாகுமுன் 
மாற்றுக் கருத்துக்களுக்கு 
மதிப்பளிக்கும் சனநாயகம் 
ரோம் செனட்டில் இருந்தது. 

மாற்றுக் கருத்தாளர்கள் 
தங்கள் முன்னிருக்கும் 
மேசையின் மீதேறி நின்று 
தலைக்கு மேலாக தொங்கும் 
சுருக்குக் கயிற்றில் 
கழுத்தை நுழைத்துக் கொண்டு 
தங்கள் கருத்தை 
சபையில் முன் வைப்பார்கள். 

சபையோர் ஏற்றுக் கொண்டால் 
கயிறு அகற்றப்படும். 

சபையோர் ஏற்க மறுத்தால் 
மேசை அகற்றப்படும். 

உலக வரைபடத்தில் 
மற்றுமோர் ரோம் 
தன்னைத் தானே 
வரைந்து கொண்டிருக்கிறது. 







5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இவையெல்லாம் அறியாத தகவல்...

மாற்றுக் கருத்தாளர்கள், சுருக்குக் கயிற்றில்
கழுத்தை நுழைத்துக் கொண்டு தங்கள் கருத்தை
சபையில் முன் வைக்க வேண்டு என்றால், எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்...
அதே சமயம் தான் கூறும் கருத்தில் தீர்மானமாக இருக்க வேண்டும்...

பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...


பாடல் வரிகள் ரசிக்க : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

sathishsangkavi.blogspot.com said...

தலைப்பை பார்த்து உள்ளே வந்தேன்...

ஒவ்வொரு வரிகளும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது...

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான வரிகள்! பாராட்டுக்கள்!

Karthika said...

enoda paratukkal

Agarathan said...

Nanri karthika.

Blogger Widgets