Saturday, January 28, 2012

மோடியா ,அத்வானியா..????




ஈழதமிழர்கள் பிரச்சனையை தீர்ப்பதில் மத்திய அரசு உறுதியுடன் இருக்கிறது . சமீபத்தில் இலங்கை பயணம் மேற்கொண்ட வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா பல திட்டங்களை துவக்கி வைத்துள்ளார் .


       -    தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்

     
ஈழதமிழர் பிரச்சனையை தீர்ப்பதிலா  இல்லை ஈழதமிழர்களையே தீர்பப்திலா என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும்.

             ------------------------------------------------------------------------------




வருங்காலத்தில் பெரிய அளவில் அரசியல் மாற்றங்கள் ஏற்படும் பார்லிமென்ட் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் நாடு இப்போது சிக்கலான நிலையில் உள்ளது இந்த சிக்கலை தீர்க்கும் வல்லமை பா.ஜ., வுக்கு மட்டும் தான் உண்டு மத்தியில் மீண்டும் பா.ஜ., தலைமை ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை

 -    தமிழக பா .ஜ ., தலைவர் பொன் . ராதாகிருஷ்ணன்

  முதலில் உங்கள் பிரதமர் வேட்பாளர் மோடியா ,அத்வானியா என்பதை தெளிவுபடுத்துங்கள் ...!!

         -------------------------------------------------------------------------------------






       ராமதாஸ் மீது பொய்யான புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை போலீஸ் ரத்து செய்ய வேண்டும் இந்த பொய்யான புகாரை அளித்தவர் மீதும் அவரை தூண்டிவிட்டவர்கள் மீதும் உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

              -    பா.ம.க.,தலைவர் ஜி.கே மணி

  ராமதாஸ் என்ன கடவுளின் அவதாரமா தப்பே செய்யமாட்டாரா ?? நீங்களே பொய்யான புகார் என்று முடிவு பண்ணிட்டா அப்ப காவல்துறை எதுக்கு நீதிமன்றம் எதுக்கு தலைவரே .???

                      ----------------------------------------------------------------







Wednesday, January 25, 2012

தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? ( ஒரு சிலரை தவிர )



        தமிழ் மக்கள் நலமாக வாழ வேண்டும் என்று தனது சொத்துகளை விற்றும் தனது மக்களை இழந்தும் முல்லை பெரியாறு அணையை கட்டி எழுப்பிய பென்னி குய்க் அவர்களை நினைவு கூறும் தை மாதத்தில் ஒரு சில நம்பிக்கை துரோகிகளையும் நாம் நினைவு படுத்த வேண்டியுள்ளது.



   தமிழ்,தமிழன் என்று தான் நடிக்கும் படத்தில் வசனம் பேசி கொண்டும் தமிழர்களுக்கு தான் தான் பாதுகாவலன் என்பது போல் நடந்துகொள்ளும் நடிகர்கள் , தமிழ் உணர்வை தூண்டிவிட்டு அதை படத்தில் வைத்து படத்தை ஓட்டும் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் இது போன்ற எத்தனையோ பேரை தமிழ் மக்களின் பணம் வாழ வைத்து கொண்டிருக்கிறது. .

       

     எத்தனையோ பிரச்சனைகளில் முதல் ஆட்களாக குரல் கொடுக்கும் இவர்கள் முல்லை பெரியார் அணை பிரச்சனையில் குரல் கொடுக்காததற்க்கு ஒரே ஒரு கரணம் மட்டுமே  அது பணம்.


        மலையாளிகள் நடத்தும் நகை கடைகளில் பிரான்ட் அம்பாசிடராக தன்னை காட்டிக்கொண்டு கொள்ளை காசு பார்க்கும் இவர்கள் எப்படி மலையாளிகளுக்கு எதிராக குரல் கொடுப்பார்கள் என்று நாம் நம்பமுடியும் கேரளாவில் தான் நடிக்கும் படம் ஓட வேண்டும் கர்நாடகாவில் ஓட வேண்டும் ,ஆந்திராவில் ஓட வேண்டும் பின் எப்படி நமக்காக குரல் கொடுப்பார்கள்.



    படத்தை ஒட்டவும் தன்னை பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ளவும் தமிழ் மக்கள் வேண்டும் தனது வருமானம் குறைகிறது என்றால் மட்டும் தமிழக மக்களை கண்டுகொள்ளமாட்டார்கள் இவர்களுக்கு நம் மக்கள் ரசிகர் மன்றம் வைத்து தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகின்றனர் அவர்களும் திருந்த போவது இல்லை நாமும் திருத்திகொள்ளபோவதுமில்லை.

  இனியாவது இவர்களுக்கு ரசிகர் மன்றம் வைப்பதும் பால் அபிஷேகம் பண்ணுவதையும் நிறுத்தி உணர்வுள்ள தமிழனாக வாழ பழகுவோமாக.

மானத்தை தொலைத்து
பாதுகாப்பாய் இருப்பதைவிட
மானத்தோடு செத்து
மறித்திருக்கலாமே ..!!! 




Saturday, January 21, 2012

படுகர் இன திருவிழாவும்... இன்றைய தமிழர் நிலையும் ....




       படுகாஸ்( Padukaas ) என்று அழைக்கப்படும் படுகர் இன திருவிழாவை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் நண்பர் சந்திரகுமார் அவர்கள் அழைப்பின் மூலம் கிடைத்தது.


       உதகை அருவங்காட்டுக்கு ( Aruvankadu ) அருகில் இருக்கும் ஜெகதளா ( Jagathala )  என்னும் படுகர் கிராமத்திற்கு நண்பரின் அழைப்பின் பேரில் சென்றோம் .


          அந்த ஊருக்குள் நுழைந்ததுமே திருவிழாக்கோலம் பூண்டிருந்த அந்த கிராமத்தை காணவே அழகாக இருந்தது ஆண்கள் எல்லாரும் வெள்ளை வேட்டி வெள்ளை சர்ட்டிலும் பெண்கள் வெள்ளை வேட்டியை உடம்பில் போர்த்திக்கொண்டும் இருந்தது அவர்களது வெள்ளந்தியான மனதை உணர்த்துவது போல் இருந்தது அவர்கள் உபசரிப்பும் அதுபோலவே .


         ஏழு கிராமங்கள் ஒன்று சேர்ந்து கெத்தையம்மன் என்னும் கடவுளுக்கு திருவிழா எடுத்து கொண்டாடினர் அனைவரும் ஒன்று சேர்ந்து நடத்திய திருவிழா அவர்களது ஒற்றுமையை உணர்த்தியது .

அனைத்தையும் விட முக்கியமான விசயம் அவர்களது மகிழ்ச்சி படுகாஸ் இன பாடல்களே . அவர்களது அனைத்து பாடல்களுமே நடனம் ஆட ஏதுவாக இருக்கும் ஆண்கள் பெண்கள் பாகுபாடு இல்லாமல் பறை அடிக்கும் பாட்டு கச்சேரியில் ஒலித்த பாடல்களுக்கும் நடனம் ஆடியது கண்கொள்ள கட்சியாக இருந்தது .சிறு வயது முதல் பெரிய வயது உள்ள அனைவருக்கும் நடனம் இயல்பாகவே வருகிறது. நடுங்க வைக்கும் குளிரிலும் இரவு 11 மணிவரை நிகழ்ச்சிகள் நடந்தாலும் கூட்டம் குறையாமல் ஒற்றுமையாக இருந்து திருவிழாவை நடத்தியது அவர்களது ஒற்றுமையை உணர்த்தியது. அவர்களது கிராமத்தில் வேறு இனத்தவர் எவரும் நிலம் வாங்கவோ குடியிருக்கவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது .

       
        இன்று தமிழன் தனது சொந்த அடையாளத்தை மறந்து மேற்கத்திய கலாசாரத்திற்கு மாறி வெகு நாட்களாகிவிட்டது. இன்று பெரும்பாலான குழந்தைகளுக்கு தமிழ் பெயரும் இல்லை தமிழ் சரியாக பேச வருவதும் இல்லை .நமது அடையாளத்தை நாம் தொலைத்து தொலைந்து கொண்டிருக்கையில் படுகர் இன மக்களின் கலாச்சாரம் மாறாத பண்டிகை கொண்டாட்டம் மற்றும் ஒற்றுமையை காண்கையில்  அவர்களை பற்றிய எண்ணம இன்னும் அதிகமானது .....




Blogger Widgets