Wednesday, January 18, 2012

ஆளை விழுங்கும் மர்ம மலை நமது ஊரில் ....


       பெர்முடா முக்கோணம் பற்றி கேள்விபட்டிரிப்பீர்கள் அந்த முக்கோண பகுதிக்குள் எது சென்றாலும் காணாமல் சென்று விடும் .இதை பற்றி எத்தனையோ ஆராய்ச்சிகள் நடந்து வரும் வேளையில் நமது ஊரிலும் அதே போன்று ஒரு இடம் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா .

ஆம் இதுவரை அதிகம் அறியப்படாத இடம் ..

 நாங்கள் குடும்பத்துடன் ஊட்டி சுற்றுலா சென்று விட்டு நண்பனின் வேண்டுகொளுக்கிணங்க ஊட்டி to கூடலூர் செல்லும் சாலையில் 23 வது கிலோமீட்டரில் ஊசி மலை என்னும் வியு பாயிண்ட் உள்ளது அங்கே சென்று பார்க்கலாம் என்று சென்ற பொது அங்குள்ளவர்களால் அறியப்பட்ட அதிர்ச்சியான தகவல் இது

கூடலூர் ( cudalore )செல்லும் சாலையில் இயற்கை அழகு கொட்டி கிடக்கும் ஊட்டியில் ( ootty ) இருந்து செல்லும் பொது பைக்கார (paikkara), நடுவட்டம்( Naduvattam ) தாண்டி 23 வது கிலோமீட்டரில் தவளை மலை ( Thavalamlai ) அதற்கடுத்து ஊசி மலை ( Uusimalai ) உள்ளது அதன் தொடர்ச்சியாக அதற்கடுத்து ஒரு பெயரிடப்படாத ஒரு மலை உள்ளது இந்த மலையின் மேல் பகுதியில் ஆள் நடமாட்டமோ விலங்குகள் நடமாட்டமோ சுத்தமாக கிடையாது . இந்த மலையின் குறிப்பிட்ட பகுதியை தாண்டி மேல்பகுதிக்கு செல்ல முயன்ற எத்தனையோ பேர் அந்த குறிப்பிட்ட பகுதிக்கு செல்ல முடியாமலே காணாமல் போயுள்ளனராம் .


( மர்ம மலை )

இதுவரை வெளியில் தெரியாமலே பல ஆராய்ச்சிகள் உள்நாட்டு விஞ்ஞானிகள் மற்றும் வெளிநாட்டினரால் நடத்தப்பட்டுள்ளன  என்றும் ஆனால் இந்த மர்மத்தை பற்றி அறியமுடியவில்லை எனவும் கூறுகின்றனர்.

பலபேர் காணாமல் போயுள்ள நிலையில் கடைசியாக கொஞ்சம் நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவை சார்ந்த இருவர் இந்த மலையை பற்றி ஆராய வந்தனர் என்றும் இவர்கள் வனத்துறை காவலர் ஒருவர் உட்பட மூவர் வீடியோ காமாரவுடன் அந்த மலையின் உச்சிக்கு செல்ல போனவர்கள் இது வரை திரும்ப வில்லை என்றும் கூறப்படுகிறது .

இந்த மலையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு விதமான மூலிகை செடி உள்ளது எனவும் அது அங்கு செல்லும் ஆட்கள் மற்றும் விலங்குகளை மறைத்து விடுகிறது எனவும் இங்குள்ளவர்கள் கூறுகின்றனர் ..



உங்களுக்கும் வாய்ப்பிருந்தால் ஒருமுறை சென்று வாருங்கள் ....






3 comments:

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

vaipirundal pogalama???????????????mela porathukku super route pola irukkay thala..??good post

Marc said...

அருமையான பதிவு பயமா இருக்கு.வாழ்த்துகள்

Anonymous said...

வணக்கம்
சென்று வாருங்கள்!!!!! திரும்பி வர முடியுமா?

Blogger Widgets