
பஞ்சாங்கம்,
சோதிடம்,
வெற்றி பலன்கள் ,
மனையடிச் சாத்திரங்கள்,
கோலப் புத்தகங்கள் வாங்க
முண்டியடிக்கும் கும்பலில்
நெரிபடவே வாய்த்திருக்கிறது
இலக்கிய ஆர்வலர்களுக்கு.
------------------------------
வயிற்றுப் பசிக்கு
திசைகளுமில்லை.
எல்லைகளுமில்லை.
------------------------------
ஆண்டி ஹீரோக்கள்
ஆயுள் முழுக்க காதலிக்கிறார்கள்.
------------------------------
பிப்ரவரி - 14 மட்டும்
வாலன்டினுடைய நாள்.
பிற நாட்களெல்லாம்
என்னுடைய நாள்.
------------------------------
சூதாடிகளுக்கும்
குடிகேடர்களுக்கும்
குடும்பம் இருப்பது போலவே தெரிகிறது.
------------------------------
குடிகளின் வாழ்வுரிமைப் போராட்டங்களை
அரசுகள் சட்டம்-ஒழுங்கு என்று
அணுகுவதாலேயே பிரச்சினைகள்
மைய நீரோட்டம் நோக்கி நகர்கின்றன.
No comments:
Post a Comment