Thursday, May 10, 2012

எழுதாத சட்டங்கள்

-------------------------------- 



 


பெரு மதிப்புற்குரியோரே!
நான் பேசுவதும் எழுதுவதும்
உங்களுக்காகத் தானன்றி
ஒருபோதும் எனக்கில்லை என்பதால்
நான் வலியுறுத்தும்
எதையும் பின்பற்றுவதில்லை.
----------------------------------------------------------

மலையாளியின் உயிருக்கு ஒரு கோடி பணமும்,
தமிழன் உயிருக்கு ஒரு கோடித் துணியும்,
சீக்கியனின் மயிரைக் காக்கவும்,
தமிழனின் உயிரைப் போக்கவும் வலியுறுத்துபவன்
அதிகாரத்தில் நீடிக்கிற வினோதம் தான்
உலகின் எட்டாவது அதிசயம் என்பேன்.  

-------------------------------------------------------------------------------- 

அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தாமல் 
வருமானத்துக்குப் புறம்பாக 
சொத்துக் குவித்தால் தவறில்லை. 
-------------------------------------------------------------------------- 




நூறுநாள் வேலை வாய்ப்புத் திட்டம்
------------------------------------------------------------
மன்னர்களும், 
வெள்ளையர்களும், 
சமீன்களும், 
மக்கள் பிரதிநிதிகளும் 
என்ற நீள்பட்டியலில் 
குடிமக்களுக்கும் 
அதிகாரப் பரவலாக்கம் நிகழ்ந்திருக்கிறது 
ஊழலில் பங்கேற்க! 
வாழ்க சனநாயகம்! 
------------------------------------------------------------------------------









Blogger Widgets