Saturday, August 27, 2011

தமிழக அரசு செய்யுமா


            இன்று உலகம் எந்திர மயமாகிவிட்டது
மரங்களில் குடியிருக்கும் குருவிகளை காணவில்லை
புதர்களில் விளையாடும் பாம்புகளை பார்க்கமுடியவில்லை
ஓணான்களை பிடித்து விளையாடிய காலம்
திரும்ப வரப்போவதில்லை  -     வருங்காலங்களில்
மனிதனை தவிர பூமியில் வேறு எதுவும் இருக்கபோவதில்லை


 இன்று மத்திய அரசின் நுறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 
கிராமபுற மக்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர் 
இவர்கள் பெரும்பாலும் செய்வது சாலை ஓரத்தில் இருக்கும் புல்களை 
சீவியும் மரங்களை வெட்டியும் சாலைகளை சீர் செய்கிறோம் என்று 
ஒரு மண் அரிப்பிரிக்கான வழியை செய்து கொண்டுள்ளனர் 
மேலும் விவசாயத்திற்கு ஆட்கள் கிடைக்காத நிலையில் இத் திட்டத்தை
 அரசு கொண்டு வந்துள்ளது . இத் திட்டத்தில் மக்கள் வேலை செய்வது
என்பது ஒரு நாளைக்கு வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே இதனால்
மக்களை சோம்பேறிகளாக்கி உள்ளது நடுவண் அரசு சாலை
ஓரத்தில் இருக்கும் புல்களை சீவினால் மழை காலத்தில்
மண் அரிப்பு ஏற்படுகிறது இதனால் மீண்டும் மீண்டும்
செய்த வேலையே செய்து கொண்டுள்ளனர் 
இதன் காரணமாக  அரசுக்கு பண விரயமமும் கால விரயமும்
 ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது இனிமேலாவது
 தமிழக அரசு சாலை ஓரங்களில் மரங்களை நட்டு தண்ணீர்
ஊற்றி வளர்க்க உத்தரவிடுமானால் கூடிய
விரைவில் தமிழகம் பசுமையடையும் என்பது நிதர்சனம் 

                                                                                                                Prakash
                                                                            

3 comments:

மதுரை சரவணன் said...

nalla karuththu aatharippoom... vali varum..vaalththukkal

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

arumaiyana karuthu pathivugal thodara valthukkal

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

தலை, மண்ணை இருபக்கம் போட்ட பின்னால் மழை வருகிறது.மழையால் சேறான அந்த சாலையின் ஓரம் எதிரே வரும் வாகனத்திற்கு இடம் விட்டு ஓரம் போனால் கை கால்களுக்கு நல்ல மருத்துவரிடம் நிச்சயம் மாவுகட்டு போடவேண்டி இருக்கும். மண்ணை போட்டதும் அது மேல ரோடு போட்டா அகலமான ரோடு கிடைக்கும் வழுக்கி விழமாட்டோம்ல. நல்ல பதிவு. தொடரட்டும் உங்கள் சமுக அக்கறை.

Blogger Widgets