Tuesday, September 27, 2011

அகரத்தான் குறும் பூக்கள்

குழந்தைகளோடு
இல்லத்திலிருக்கையில் தவழவும்,
வெளியேறுகையில் நடக்கவும்
கற்று வைத்திருக்கிறேன்.
-------------------------------------------------------

இல்லத்தில் நிறைந்திருக்கும்
வண்ணம் தோய்ந்த
சுவர்ச் சித்திரங்களும்,
குழந்தை எழுத்துக்களும்,
கரிக் கோடுகளும்,
கை, காலுடைந்த பொம்மைகளும்
பால்யத்தின் கதவை
திறந்து விடுகின்றன.
------------------------------------------------------

என்னை வரைந்து
கை, கால் உடைத்து
மகிழ்கிறான் பெரியவன்.

கன்னத்தில்
முத்தம் பதித்து
நெகிழ்கிறாள் சிறியவள்.

வீட்டிற்குள் நுழைந்ததும்
என்ன குறை சொல்வானோ,  
கவலையடைகிறாள் மன்னவள்.

மாதச் சம்பளம் வாங்கிய கையில்
எல்லோருக்கும்  
என்ன வாங்கி வருவதென
அடுமனை வாசலில்
குழப்பத்தில் நிற்கிறேன் நான்.
------------------------------------------------------

                      - அகரத்தான். 

1 comment:

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

அடடா அழகான கவிதைகள் , குழந்தைகள் உணர்வும் அப்பாவின் மனதும் அழகாக சொல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து நல்ல கவிதை எழுதுங்கள் .வாழ்த்துக்கள்

Blogger Widgets