Saturday, October 8, 2011

மாடு ஏன் காலேஜ் போகல??




படிச்ச ஒருத்தன் கிராமத்துக்கு போறான்.., அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திக்கிட்டு இருக்கு..
அவனுக்கு ஆச்சரியமா இருக்கு..
பக்கத்தில ஒரு குடிசைக்குள்ள ஒரு விவசாயி சாப்பிட்டுட்டு இருந்தாரு.. அவர்கிட்ட கேட்டான்…

படிச்சவன்: மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..?

விவசாயி : அது பழகின மாடு தம்பி.., அதுவே சுத்திக்கும்..,
படிச்சவன் : நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத நிறுத்திட்டா…! எப்படி கண்டுபிடிப்பீங்க..?

விவசாயி : அது கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி..,  சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம் வராது.. அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்..
படிச்சவன் : அது சுத்தறதை நிறுத்திட்டு., ஒரே இடத்துல நின்னு..,  தலைய மட்டும் ஆட்டினா..!  அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..?

விவசாயி : இதுக்குத் தான் தம்பி., நான் என் மாட்டை காலேஜூக்கெல்லாம் படிக்க அனுப்பலை..!
படிச்சவன்: ? ? ? ? ?
பெருசுக்கு  லொள்ளு கொஞ்சம் கூடத் தான்

Join Only-for-tamil

No comments:

Blogger Widgets